29.7.18

வண்ண மருத்துவம் - COLOUR THERAPY

வண்ண மருத்துவம் 

 கலர் தெரப்பி


   மருந்தில்லா மருத்துவ முறைகளில் வண்ண மருத்துவத்திற்க்கு முக்கிய இடம் உண்டு. நாம் அன்றாடம் பார்க்கும், பயன்படுத்தும் அழகிய வண்ணங்களுக்கு நமது உடலில் உள்ள நோய்களை போக்கும் ஆற்றல் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?
  அந்த காலத்தில் இயற்கை மருத்துவத்தில் இந்த நிறங்களை பயன்படுத்தி சிகிச்சை அளித்தனர். நமது உடலில் மற்றும் மனதில் உள்ள குறைபாடுகளை கணித்து அக்குறைபாடுகளை போக்க உடலுக்கும் மனதிற்கும் வலிமைதரும் வண்ணங்களை நவரத்தின கற்களை கொண்டு மோதிரங்கள், ஆபரணங்களாக செய்து அணிந்து கொண்டனர்.ஆனால் அனைவராலும் அவற்றை வாங்கி பயன்படுத்த முடியாதல்லவா! அதற்கு மாற்றுதான் இந்த வண்ணநீர் தயாரிப்பு முறை.
  பைசா செலவில்லாமல் வீட்டிலேயே சாதாரண குடிநீரை வண்ண நீராக தயாரித்து குடிப்பது, உடலில் வண்ண ஒளிகளை பாய்ச்சுவது ஆகியவற்றின் மூலம் நமது உடலில் உள்ள பிணிகளை போக்க முடியும்.  சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்களில் உள்ள நிறங்களை பயன்படுத்தி மிகவும் சுலபமாக இந்த வண்ண சிகிச்சையைச் செய்துகொள்ளலாம்.
  சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் இருப்பதாக விஞ்ஞானம் கூறுகின்றது. வண்ண சிகிச்சையிலும் இந்த ஏழு வண்ணங்களைத் தான் பயன்படுத்தப் போகிறோம்.





1. ஊதா- Violet
2. கருநீலம் - Indigo
3. நீலம் - Blue
4. பச்சை - Green
5. மஞ்சள் - Yellow
6. ஆரஞ்சு - Orange
7. சிகப்பு - Red



   இதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக VIBGYOR (வெப்ஜியார்) என்று அழைப்பார்கள்.
இதில் ஊதா, கருநீலம், நீலம் ஆகிய மூன்று நிறங்களும் குளிர்ச்சித் தன்மை கொண்டது.
   பச்சை நடுநிலையான தன்மை கொண்டது.
மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு ஆகிய மூன்று நிறங்களும் பெப்ப தன்மை கொண்டது.



வண்ணநீர் தயாரிக்கும் முறை :-


  தங்ளுக்கு தேவையான வண்ணம் கொண்ட சுத்தமான கண்ணாடி குடுவையை எடுத்துக்கொள்ளவும். தேவையான வண்ணத்தில் கண்ணாடி குடுவை இல்லையென்றால் கவலை வேண்டாம் கடைகளில் கிடைக்கும் ஒளி ஊடுருவக்கூடிய வண்ண நெகிழிக் காகிதங்களை வாங்கி குடுவையின்மேல் சுற்றிக்கொண்டு பயன்படுத்தலாம். அதில் காய்ச்சி ஆறவைத்த சுத்தமான நீரை ஊற்றி மூடியிட்டு நன்றாக சூரியஒளி படும் இடத்தில் ஐந்து முதல் ஆறு மணிநேரம் வைக்கவும். பின்னர் இதை எடுத்து நோயின் தீவிரத்தைப் பொருத்து அரை அல்லது ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை 50ml வீதம் நோயிக்கு தக்கவாறு பருகலாம்.


வண்ண நீரால் தீரும் நோய்கள் :-


  
ஊதா ( VIOLET) :
      நரம்பு சார்ந்த நோய்கள் குணமாகும், நரம்பு மண்டலம் வலிமை பெரும், எலும்பு, எலும்பு மஜ்ஜை, வழுக்கை, கண் சார்ந்த நோய்கள், பிரசவகால வேதனையைக் குறைக்கும்.

 

கருநீலம் - (INDIGO) :
  வாய், கண், மூக்கு, தொண்டை சம்மந்தமான நோய்கள். சுவாச நோய்கள், அனைத்து வகையான தலைவலிகள், ஆஸ்துமா, காசநோய், மலச்சிக்கல், ஜீரண மண்டலக் கோளாறு, வலிப்பு மற்றும் மனநோய்.


நீலம் - ( BLUE ) :
    இந்த நீல நிறத்தின் சிறப்பு என்னவென்றால் இது உடலில் உள்ள விஷத்தை உரிஞ்சும் தன்மை கொண்டது. வெப்பம் சார்ந்த நோய்கள், மலேரியா, காய்ச்சல், மூட்டுவலி, தோல் நோய்கள், கொப்பளம், மூக்கில் நீர் வடிதல், மனஅழுத்தம், காயங்கள் மற்றும் அனைத்து விதமான வலிகள்.

 

பச்சை - ( GREEN ) :
   இதயம் சம்பந்தமான கோளாறுகள், புற்றுநோய், குளிர்கால காய்ச்சல், தொற்றுநோய், இரத்த அழுத்தம், கர்ப்பப்பை நோய்கள், குடல் புண், தாது விருத்தி, பார்வைத் திறனை அதிகரிக்கும்.


மஞ்சள் - ( YELLOW ) :
   நீரிழிவு நோய், சிறுநீரக நோய்கள், கல்லடைப்பு, மஞ்சள் காமாலை, அஜீரணம், தொழுநோய், முடக்குவாதம் மற்றும் மலச்சிக்கல்.


ஆரஞ்சு - ( ORANGE ) :
  சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்களை நீக்கும். சிறுநீரக வீக்கம், குடல் வீக்கம், குடல் இரக்கம் சரிசெய்யும், மனதிற்கு உற்சாகம் தரும், உடல் வெப்பத்தை நாடித்துடிப்பை தூண்டும். பால் சுரப்பை அதிகரிக்கும்.


சிவப்பு - ( RED ) :
  இரத்த சோகை, இரத்த அழுத்தம், பக்கவாதம், காசநோய், உடல் பலகீனம், சோர்வு, உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல், மற்றும் இது உடல் வெப்பத்தை அதிகரிக்கும், உணர்ச்சிகளை தூண்டிவிடும்.

உடலில் வண்ண ஒளிகளை பாய்ச்சுதல்:-


1. வண்ண கண்ணாடிகளைக் கொண்டு சூரிய ஒளி மூலம் உடலில் வண்ணங்களைப் பாய்ச்சுதல்,

2. வண்ண மின்விளக்குகளைப் பொருத்தி உடலில் வண்ணங்களைப் பாய்ச்சலாம்.

3. டார்ச் லைட்டில் வண்ணத் தாள்களை சுற்றி அதன்மூலம் உடலில் வண்ணங்களை பரவச் செய்யலாம் .

4. நோய் குறியுள்ள இடங்களில் வண்ணங்களை பரப்புவதன் மூலம் நோய்களை தீர்க்கலாம்.

5. ஹார்மோன் சுரப்பிகளைத் தூண்டி அதைச் சமநிலைப்படுத்தலாம்.

6. நமது உடலில் உள்ள ஆறு ஆதாரச் சக்கரங்களில் வண்ணங்களை பரப்புவதன் மூலம் சக்கரங்களுக்கு ஆற்றலைப் பெருக்கி நோய்கள் இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.


நிறம்
சக்கரம்
தீரும் நோய்கள்

சிவப்பு

மூலாதாரம்
விந்து அணுக்கள் உற்பத்தி ஆண், பெண் தன்மை குறைபாடு, மலட்டுத்தன்மை, உதிரப்போக்கு


ஆரஞ்சு


சுவாதிஸ்டானம்
நரம்பு மண்டலம், தோல் நோய்கள்ள், அலர்ஜி, கரு முட்டை, கருப்பை குறைபாடு, உடல் அழகுபெரும்,மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்சனை, கை,கால்,மூட்டுவலிகள்



மஞ்சல்



மணிப்பூரகம்
கல்லீரல்,மண்ணீரல் குறைபாடு, நீரிழிவு,மஞ்சல் காமாலை, இன்சுலின் குறைபாடு, குடல் நோய்கள், ஜீரணக் குறைபாடு, உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தும். அட்ரீனல் சுரப்பி பலம்பெரும்


பச்சை


அனாகதம்
 இதய நோய்கள், நுரையீரல் நோய்கள், ஆஸ்துமா,இரத்த சோகை, இரத்த அழுத்தம், இரத்த ஒட்டம் சீராகும், தைமஸ் சுரப்பி பலம்பெரும்


நீலம்


விசுக்தி
தைராய்டு பிரச்சனை, சுவாசப் பிரச்சனை, நோய்எதிர்பு சக்தி, மெளிந்த அல்லது அதிக எடடை, திக்குவாய், இருமல், தைராய்டு சுரப்பியை கட்டுப்படுத்தும்



கருநீலம்



ஆக்ஞை
மன நோய்கள், உணர்ச்சி வசப்படுதல், கண், காது, மூக்கு சார்ந்த நோய்கள், தலைவலி, மனம் ஒருநிலைப்படும், இது பிட்யூட்டரி சுரப்பியை இயக்குகிறது, அனைத்து சுரப்பிகளையும் கட்டுப்படுத்தும்





ஊதா





சகஸ்காரம்
கோபம்,பொறாமை, வெறுப்பு, பயம் போன்ற எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தும், மனதில் தோன்றும் தீய எண்ணங்களைப் போக்கி அன்பு,கருணை, போன்ற நல்ல எண்ணங்கள் தோன்றச் செய்யும், ஆன்மிக நாட்டத்தை அதிகரிக்கும், இந்த சகஸ்கார சக்கரத்தில் மற்றவர்கள் கை வைக்கவோ தொடவோ அனுமதிக்கக் கூடாது





வாழ்க வளமுடன்
வாழ்க பல்லாண்டு


Ramasamy MD Acu

1 கருத்து: