20.8.18

பாலகிரக தோஷம்

 ஏட்டுக் குணம்

    முன்பொரு காலத்தில் இப்படி ஒரு சிகிச்சை முறை இருந்தது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!
  குழந்தைகளுக்கு பாலகிரக தோஷம் ஏற்பட்டால், அதற்கு ஏடு எழுதிக் கட்டினால் உடனே குணமாகுமாம்!?!?!? குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், கண் சொருகி விடுதல், உதடு வறண்டு காணப்படுதல், மேற்பார்வை பார்ப்பது, சுணக்கம், சிணுங்கிக் கொண்டே இருத்தல் போன்றவை இதற்கு அறிகுறிகளாகும். இதனால் ஒருசில குழந்தைகள் வாந்தியெடுக்கும். இவை ஏற்பட்டால் பால கிரகத் தோஷம் என அறிந்து ஏடு எழுதிக் கட்ட வேண்டுமாம்! ஏடு எழுதும்போதே குழந்தைக்கு நோய் குணமாவதை உணரலாமாம்!!!
பாலகிரக தோஷத்தினை சில இடங்களில் ஏட்டுக் குணம் என்று சொல்வார்கள். இந்நோய் பதினாறு வயதுவரை ஏற்படும் ஏடு எழுதுவதில் சிறிய ஏடு என்றும், பெரிய ஏடு என்றும் இருவகையுண்டு சிறிய ஏடு எழுதுதலானது, பனை ஓலை ஒன்றில் எழுதிச்சுருட்டிக் கட்டப்படுவதாகும். பெரிய ஏடானது தனித்தனி மடல்களாக பதினாறு மடல்களில் எழுதப்படுவதாகும்.

சிறிய ஏடு எழுதும் முறை


பனை ஒலையில் இறை சக்கரம் வரைந்து வடமொழி எழுத்தினை(சமஸ்கிருதம்) எழுதி, ஒலையை நன்கு சுருட்டி இறைவனை வனங்கி மஞ்சள் தடவிய நூலினால் கட்டி அதற்கு சாம்பிராணி புகை காட்டி குழந்தையின் கையில் கட்டிவிட வேண்டுமாம்.

சிறிய ஏடு எழுதுவதற்கான மந்திரம்


ஸர்வ மங்கள மங்கல்யே சிவே சர்வார்த்த சாரதே சரண்யே த்ரியம்பகே
கெளரி நாராயணி நமோ ஸ்துதே ஷயகாரக


சிறிய ஏடு எழுதுவதற்கான எந்திரம் (படம்)


பெரிய ஏடு எழுதும் முறை


பெரிய ஏடு எழுதுதலானது பதினாறு பனை ஓலைகளால் எழுதப்படுவதாகும். குழந்தைக்கு ஒரு மாதம் ஒர் ஆண்டு முடியும்போது இந்நோய் ஏற்படும். அப்போது அந்த மாதத்திற்குரிய அல்லது ஆண்டிற்குரிய ஏட்டை மாற்றிக் கட்டினால் போதுமானது. இவ்வேட்டைத் தொட்டிலில் கட்டி வைக்கவேண்டும். ஆண் குழந்தையாக இருந்தால் தொட்டிலின் வலது பக்கமும் பெண் குழந்தையாக இருந்தால் இடது பக்கமும் கட்ட வேண்டுமாம்.பிறகு காலை, மாலை இரு வேளையும் புகைபோட வேண்டுமாம்.


பெரிய ஏடு எழுதுவதற்கான மந்திரம்


தசத்ரவ்ய ஸ்மாயுக்தம் ஸஸுகந்தஞ்ச ஸுமனோஹரம்
தூபம் தஸ்யாமி தேவேசி லங்க்ருஹான தயாநிதே
தூபாரா ஜாய நம தூபம் ஆக்ராபயமி
தூபா நந்தரம் ஆசமனீயம் ஸமர்ப யாமே
ஸாஜ்யந்திரி வர்த்தி ஸம்யுக் தம் வஹ்நினா
யோஜிதம் மயா க்ருஹான மங்களம்
தீபம் தீரைலோக்ய தீமீராபஹம்

 பெரிய ஏடு எழுதுவதற்கான எந்திரம் (படம்)

 புகைபோட வேண்டிய வஸ்துக்கள்.

 

ஆண்டு
மாதம்
நாள்
புகை போடும் பொருட்கள்
1 1 1
எருமைக் கொம்பு
தலை முடி
2 2 2
மாட்டுக்கொம்பு
பாம்புச் சட்டை
3 3 3
கோழிஇறகு
மயில்இறகு
4 4 4
சின்னி இலை
வசம்பு
5 5 5
ஊர்சுத்தி, ஓமம்
தலை முடி
6 6 6
ஊர்சுத்தி, வசம்பு
வெற்றிலை காம்பு
7 7 7
வேப்பிலை, துளசி
8 8 8
நண்டு ஓடு
ஆமை ஓடு
9 9 9
கழுகு இறகு
கோழி இறகு
10 10 10
கம்பளி மயிர்
11 11 11
நாய் வால்,தலை முடி
பழைய செருப்புவார்
12 12 12
மாட்டுக்கொம்பு
பாம்புச் சட்டை
13 13 13
கழுகு இறகு
ஊர்சுத்தி

14 14 14
முள்ளி விதை
நண்டு ஓடு
15 15 15
வேப்பிலை
வில்வ இலை
16 16 16
ஆமை ஓடு
தூதுவலை

2 கருத்துகள்:

  1. Dear Mr. Ramasamy, MD Acu, you have done a great and wonderful service to humanity by publishing various healing methods in the healthcare services to the suffering people. God bless you!26.11.2020 ��

    பதிலளிநீக்கு