பயோ கெமிஸ்ட்ரி - BIO CHEMISTRY
தாது உப்புகள்:-
பயோ கெமிஸ்ட்ரி (BIO CHEMISTRY) மருத்துவத்தை கண்டுபிடித்தவர் வில்ஹெம் ஹென்றி சூஸ்லர் என்ற மாமேதை ஆவார். 1872ம் ஆண்டு இம்மருத்துவத்தை உலகிற்கு அளித்தார். இவர் ஹோமியோபதி மருத்துவர். டாக்டர் ஹானிமன் காலத்தில் வாழ்ந்தவர். இவர் மனிதனின் எரித்த உடலின் சாம்பலை எடுத்து ஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற பன்னிரெண்டு தாது உப்புக்கள் இருப்பதை கண்டுபிடித்தார். மனிதனின் ஒவ்வொரு உறுப்பிலும் ஒவ்வொரு தாதுக்கள் நிறைந்திருப்பதைக் கண்டார். இதில் ஒன்று இரண்டு தாதுக்கள் குறைவதால் அல்லது மிகுவதால் மனிதனுக்கு நோய் உண்டாய்கிறது என்பதை உணர்ந்து குறைவுள்ள அந்த தாது உப்புக்களை கொடுத்து அதை சரிக்கட்டினால் நோய்கள் நீங்கிவிடும் என்பதை தன் ஆராய்சியின் மூலம் நிருபித்தார்.
இந்த தாதுக்களில் ஒன்றை எடுத்து அதில் ஒன்பது மடங்கு பால் சர்க்கரை சேர்த்து அதை கல்வத்தில் இட்டு இரண்டு முதல் மூன்று மணிநேரம் அரைக்க வேண்டும். அரைத்து எடுத்த மருந்து 1X வீரியம் ஆகும். அதேபோல் 1X வீரியம் உள்ள மருந்து ஒரு பங்கும் பால் சர்க்கரை ஒன்பது பங்கும் சேர்த்து அரைத்து எடுத்த மருந்து 2X வீரியம் ஆகும். இதேபோல் 2X, 3X, 6X, 12X, 30X, 200X வரையில் மருந்துகள் தயாரிக்கப் படுகின்றது. இது பவ்டர் வடிவிலும் மாத்திரை வடிவிலும் ஹோமியோ மருந்து கடைகளில் கிடைக்கிறது. நமக்கு தேவையான மருந்துகளை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இதை மருந்து என்று சொல்வதைவிட சத்து டானிக் என்றும் தாது உப்புக்கள் என்றும் சொல்லலாம்.
இதில் பக்கவிலைவுகளோ உடலுக்கு தீங்கோ ஏற்படுவது இல்லை. மற்ற மருந்துகளுடன் இணைந்து சாப்பிடலாம். இதனை புண்கள், சிராய்ப்பு, தோல்நோய்கள், கட்டிகள், வீக்கம் முதலியவற்றிற்கு எண்ணெயில் குழைத்து மேல் பூச்சாகவும் பூசலாம் பெரம்பாஸ் மாத்திரையை புண்கள் மீது பூசினால் ரத்தம் வருவது உடனே நிற்கும். புண்கள் விரைவில் ஆறும்.
பயோ கெமிஸ்ட்ரி முறையில் பனிரெண்டு தாதுக்களையும் மூன்று பிரிவுகளாக பிடிக்கின்றனர்.
I. க்ளோரைட்.
1. நேட்ரம் முரியாட்டிகம்
2. காலி முரியாட்டிகம்
3. கல்கோரியா சல்பியூரிகம்
II. சல்பேட்
1. நேட்ராம் சல்பியூரிகம்
2. காலி சல்பியூரிகம்
3. சிலிகா
4. கல்கோரியா ப்ளூரிகம்
III. பாஸ்பேட்கள்
1. மெக்னீஷியா பாஸ்பாரிகம்
2. நேட்ரம் பாஸ்பாரிகம்
3. கல்கோரியா பாஸ்பாரிகம்
4. பெர்ரம் பாஸ்பாரிகம்
5. காலி பாஸ்பாரிகம்
பயோ ஹெமிஸ்ட்ரி மருந்துகள்
1. கல்கோரியா பாஸ்பாரிகம்
CALCAREA PHOSPHORICA
2. கல்கோரியா சல்ப்யூரிகம்
CALCAREA SULPHURICA
3. கல்கோரியா ப்ளோரிகம்
CALCAREA FLUORICA
4. காலி பாஸ்பரிகம்
KALI PHOSPHORICUM
5. காலி சல்ப்யூரிகம்
KALI SULPHURICAM
6. காலி முரியாட்டிகம்
KALI MURIATICUM
7. நேட்ரம் பாஸ்பரிகம்
NATRUM PHOSPHORICUM
8. நேட்ரம் சால்ப்யூரிகம்
NATRUM SULPHURICAM
9. நேட்ரம் முரியாட்டிகம்
NATRUM MURIATICUM
10. பெர்ரம் பாஸ்பரிகம்
FERUM PHOSPHORICUM
11. மெக்னோஷியா பாஸ்பரிகம்
MAGNESIA PHOSPHORICUM
12. சிலிகா
SILICA
மருந்துகளும் நோய்க் குறிகளும்
1. கல்கோரியா பாஸ்பாரிகம்
CALCAREA PHOSPHORICA
இதை சுருக்கமாக கல்-பாஸ் என்று அழைப்பார்கள். இது எலும்புகள், பற்கள், இணைப்பு தசைநார், நுரையீரல் போன்றவற்றில் இருக்கிறது. முக்கியமாக எலும்புகளில் 57% இருக்கிறது.
இத்தாது குறைந்தால் எலும்பு சம்மந்தமான நோய்கள் ஏற்படும்.
இரத்த சோகை, எலும்புருக்கி நோய் ஏற்படும். உடல் மெலிந்து காணப்படும். நுரையீரல் பலவீனத்தால் மூச்சுவிட சிரமமாக இருக்கும். வரட்டு இருமல், டான்சில் நோய்களுக்கு ஏற்ற மருந்து.
குழந்தைகளுக்கு பல் முலைக்கும்போது ஏற்படும் நோய்கள், உச்சந்தலை எலும்பு மூடாமல் இருத்தல், மற்றும் முடி உதிர்தல், சளி, தலைவலி, முகப்பரு போன்ற பிரச்சினைக்கு கொடுக்கலாம்.
இதை தொடர்ச்சியாக கொடுக்க வேண்டியது இல்லை. இரண்டு அல்லது மூன்று நாட்கள் மருந்து கொடுத்தால் போதும் தேவைப்பட்டால் சில நாட்கள் கழித்து மீண்டும் கொடுக்கலாம்.
2. கல்கோரியா சல்ப்யூரிகம்
CALCAREA SULPHURICA
இதனை சுருக்கமாக கல்-சல் என்று அழைப்பார்கள். இவ்வுப்பு உடலின் தசைகள் இணையும் பாகம், பித்தநீர் ஆகியவற்றில் இருக்கும்.
ஆறாத புண்கள், கட்டிகள், சொறி, சிறங்கு ஆகியவற்றிற்கு ஏற்ற மருந்து.
தலையில் ஏற்படும் பொடுகு, கொப்பளங்கள் ஆகியவற்றை போக்கும். காதில் சீல் வடிதல், பற்க்களில் சீல் வடிதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது. காதின் பின்பக்கம் வீக்கம், தொண்டை பகுதியில் வீக்கம்.
மாதவிடாய் பிரச்சனை, வொள்ளைப்படுதல், வெட்டை நோய் போன்ற பிச்சனைகளுக்கு இந்த கல்சால் கொடுக்கலாம்.
முக்கியமாக மஞ்சள் நிறத்தில் சீல் வடிதல், சளி மஞ்சள் நிறத்தில் வந்தால் அதற்கு இது முக்கியமான மருந்து.
3. கல்கோரியா ப்ளோரிகம்
CALCAREA FLUORICA
இதைச் சுருக்கமாக கல்-புளூ என்று அழைப்பார்கள். இது எலும்பின் மேல்ப் பகுதி, தோலின் மேல் பகுதி, சுருங்கி விரியும் தசைநார்கள், இருதயம், இரத்தக் குழாய் சுவர்களிலும் பற்களின் எனாமல் பகுதியிலும் உள்ளது.
இது குறைந்தால் எலும்புகளில் கரடுமுரடான தன்மை, கோணல், வலி ஏற்படும். கை கால் வீக்கம், புற்றுநோயால் ஏற்படும் கடினமான வீக்கத்தையும் கரைக்கும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். மூல வியாதியால் ஏற்படும் கட்டிகளை கரைக்கும். மூல வியாதி ஏற்படாமல் பாதுகாக்கும். பற்கள் ஆடுவது, மூக்கில் சதை வளர்ச்சி, உதடு ஈரப்பதம் இன்றி வெடிப்புகள் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும். கண் கட்டிகள், கண் புரை, முதுகு வலி, போன்ற பிரச்சனைகளை தீர்க்கும்.
4. காலி பாஸ்பரிகம்
KALI PHOSPHORICUM
இந்த உப்பு மூளை, நரம்புகள், இதயம், தசைகள் போன்றவற்றில் காணப்படுகிறது.
இது குறைவதினால் மனக் குழப்பம்,
தேவையற்ற மனக் கவலை, கோபம், பயம் போன்ற மனரீதியான பிரச்சனைகள் தோன்றும் அதை நிவர்த்தி செய்கிறது.
நரம்பு பலகீனம் , ஞாபகமறதி, பரிச வாயு பிரச்சனைகள் தீர்க்கும்.
இரத்தம் கெட்டு விஷத்தன்மை அடைதல் எப்போதும் வயிறு நிரம்பிய போன்ற உணர்வு. தொடர்ந்து வேலை செய்யும்போது நோயின் தாக்கம் அதிகரிக்கும். கெட்ட கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அதனால் ஏற்படும் தலைவலி.
மூளை, நரம்பு மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு ஏற்ற மருந்து.
5. காலி சல்ப்யூரிகம்
KALI SULPHURICAM
இது தசைகளிலும் மேல் தோலிலும் கானப்படுகிறது.
நாக்கில் மஞ்சள் படிவுகள் காணப்படும். கொப்பளங்கள் அதில் மஞ்சள் சீழ் காணப்படும்.
காக்கை வலிப்பு, கைகால் வலி, வாத வலி.
நெஞ்சுச் சளி, மூக்கடைப்பு
மஞ்சளாக வயிற்றுப் போக்கு, மூல நோய் அறிகுறிகள்.
பெண்களின் வெள்ளைப் போக்கு மஞ்சளாக கானப்பட்டால் அதை போக்குகிறது.
இது உடலில் அதிக வியர்வையை உண்டு பண்ணி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.
6. காலி முரியாட்டிகம்
KALI MURIATICUM
உடலில் நரம்புகள், தசைகள், இரத்தம், மூளை ஆகிய பகுதிகளில் இவ்வுப்பு காணப்படுகிறது.
ஞாபகமறதி, கவலை, உடலில் அரிப்பு, எரிச்சல் காணப்படும்.
கொப்பளங்கள் அதில் வெள்ளை சீழ் வடிதல்.
நாக்குகும் வெளுத்து காணப்படும். உடலில் வெண்மையாக தோலுரியும். கழிவுகளில் வெண்மை படர்ந்திருக்கும்.
கண் சம்மந்தப்பட்ட நோய்கள், பொடுகு, பொன்னுக்கு வீங்கி போன்றவற்றை போக்குகிறது.
உதடுகளில் நாக்கில் புண்கள்.
நாடி பலகீனம் அதனால் ஏற்படும் படபடப்பு.
சிறுவர்களுக்கு வயிற்றில் ஏற்படும் பூச்சித் தொல்லைகள். கீரிப்பூச்சி,கொக்கிப் பூச்சி, நாடப் பூச்சிகள் போன்ற அனைத்து பூச்சிகளையும் அழிக்கும்.
7. நேட்ரம் பாஸ்பரிகம்
NATRUM PHOSPHORICUM
இந்த உப்புக்கள் தசைகள், நரம்புகள், இரத்தம் முதலியவற்றில் காணப்படுகிறது.
இந்த உப்பு உணவுப் பொருள்களை ஜீரணிக்க பயன்படுகிறது. புளித்த ஏப்பம், புளித்த வாந்தி, எதிர்க்களித்தல், மலம் சிறுநீரில் புளித்த வாடை போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.
இரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றை போக்கும்.
வயிற்றுப்போக்கும் மலச்சிக்கலும் மாறிமாறி வரும் பிரச்சனைக்கு இது தீர்வளிக்கிறது.
8. நேட்ரம் சால்ப்யூரிகம்
NATRUM SULPHURICAM
உடம்பில் உள்ள தேவையற்ற கெட்ட நீரை வெளியேற்றுவது இதன் முக்கிய வேலை. இது கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்களை நன்றாக செயல்பட உதவுகிறது.
சிறுநீரக கல், பித்தப்பை கல், தலைவலிக்கு இது சிறந்த மருந்து.
மழை காலத்தில் தொல்லை கொடுக்கும் ஆஸ்துமா, படர்தாமரை, மூலக் கட்டிகள் ஆகியவற்றை போக்கும்.
நீரிழிவு நோயிக்கு இது முக்கிய மருந்து.
தூக்கமின்மை, பசியின்மை, அஜீரணம், மனக்குழப்பம் ஆகியவற்றையும் போக்கும்.
9. நேட்ரம் முரியாட்டிகம்
NATRUM MURIATICUM
இது நம் சமையல் உப்பு, இது உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் நிறைந்துள்ளது. இது கூடினாலும் குறைந்தாலும் வியாதிகள் தோன்றும்.
வாயில் அதிக உமிழ்நீர், கண்களில் அடிக்கடி நீர் வடிதல், வாந்தி ஆகியவை.
அதிக கோபம், கவலை, மன அழுத்தம், கெட்ட கனவுகள், பயம் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.
நீண்டகால மற்றும் கடினமான தலைவலி, மாணவர்களுக்கு ஏற்படும் தலைவலியை போக்கும்.
கண்ணில் நீர் வடிதல், இரட்டை பிம்பம், கண் சிவந்து எரிச்சல் ஆகியவற்றை போக்கும்.
மூக்கில் நீர் வடிதல், அடுக்கு தும்மல், மூக்கடைப்பு.
நாக்கில் புண்கள் மற்றும் நாக்கில் ருசியற்ற தன்மை ஆகியவற்றையும் போக்குகிறது.
10. பெர்ரம் பாஸ்பரிகம்
FERUM PHOSPHORICUM
இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் எல்லா நோய்களுக்கும் இதைக் கொடுக்கலாம்.
இரத்த சோகை, சிவப்பு அணுக்கள் குறைபாடு, ரத்தப்போக்கு ஆகியவற்றிற்கு கொடுக்கலாம்.
காது, மூக்கு, வாய், மலத்துவாரம் ஆகியவற்றில் எங்கு இரத்தக் கசிவு ஏற்ப்பட்டாலும் இம்மருந்து கொடுக்கலாம்.
கண்கள் வீக்கம், எரிச்சல், கண்ணில் மணல் உறுத்துவது போன்ற உணர்வு ஆகியவற்றிற்கும் இது கொடுக்கலாம்.
கல்லீரல் வீக்கம் , மண்ணீரல் வீக்கம், சிறுநீரக எரிச்சல், டான்சில், காய்ச்சல், இரத்த வாந்தி ஆகிய நோய்களையும் குணமாக்கும்.
விட்டு விட்டு வரும் இருமல், மூச்சுத்திணறல் ஆகியவற்றிற்கும் பயனளிக்கிறது.
உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு இதை வெளிப் பூச்சாகவும் பயன்படுத்தலாம். ரத்தம் வருவது உடனே நிற்கும். காயங்கள் விரைவில் ஆறும்.
11. மெக்னோஷியா பாஸ்பரிகம்
MAGNESIA PHOSPHORICUM
இது தசைகள், தசைநார்கள் மற்றும் நரம்புகளில் காணப்படுகின்றது.
இது வலிகளைப் போக்க பயன்படும் முக்கியமான மருந்து.
மிகவும் கடுமையான வலிகள், கூர்மையான துளைக்கும் வலிகள் இடம் விட்டு இடம் மாறும் வலிகள் போன்றவற்றுக்கு சிறந்தது.
தலை முழுவதும் சம்மட்டியால் அடிப்பது போன்ற வலி, நரம்பு வலிகள், கண், பல் வலிகள் சூடான ஒத்தடம் கொடுத்தால் இதமாக இருக்கும் அத்தகைய வலிகள் இதன் முக்கிய குறியாகும்.
திக்குவாய், கைகால் சோர்வு, இதயம், காது, வயிற்று வலிகளுக்கு சிறந்தது.
12. சிலிகா
SILICA
இது கருங்கல் பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் உப்பு. இது தோல் மற்றும் நரம்புகளில் இருக்கிறது.
இந்த தாதுவின் குறைபாட்டால் உடம்பில் சொரி, சிறங்கு, கட்டிகள் உருவாகும். அத்தகைய வியாதிகளுக்கு இதைக் கொடுக்கலாம்.
உடல் தெளிந்து போதிய சத்து இல்லாமல் காணப்படுபவர்களுக்கு இதைக் கொடுக்கலாம்.
இது கட்டிகளை பழுக்கவைத்து உடைத்து அதில் உள்ள சீழ் கழிவுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.
இரவில் அதிக வியர்வை ஏற்படும் நபருக்கு இதைக் கொடுக்கலாம்.
பயோ ஹெமிஸ்ட்ரி மருந்துகளை நோய்களுக்கு தக்கவாறு சில மருந்துகளை ஒன்றாக கலந்து கூட்டு மருந்தாக்கி பயன்படுத்தலாம்.
நோய்கள்
|
மருந்துகள்
|
|
1
|
தலைவலி
|
மெக்.பாஸ், பெர்.பாஸ், நேட்.பாஸ், காலி.பாஸ்
|
2
|
காய்ச்சல்
|
நேட்.சல், காலி.மூர், பெர்.பாஸ்
|
3
|
இருமல், சளி
|
பெர்.பாஸ், காலி.மூர், நேட்.சசல்ப்
|
4
|
வயிற்றுப்போக்கு
|
மெக்.பாஸ், காலி.பாஸ், பெர்.பாஸ், காலி.மூர்
|
5
|
பல்வலி
|
கல்.சல், சிலிகா, கல்.ப்ளூ
|
6
|
தோல் நோய்
|
கல்.சல், சிலிகா, காலி.சல், காலி.மூர்
|
7
|
மலச்சிக்கல்
|
சிலிகா, நேட்.மூர், காலி.மூர்,
|
8
|
நரம்புத்தளர்ச்சி
|
காலி.பாஸ், கல்.பாஸ், மெக்.பாஸ், பெர்.பாஸ்
|
9
|
மூலம்,
|
காலி.மூர், பெர்.பாஸ், கல்.ப்ளூ, காலி.பாஸ்
|
10
|
வயிற்றுவலி
|
மெக்.ஸ், பெர்.பாஸ், கல்.பாஸ், நேட்.சல்
|
11
|
ஆஸ்துமா
|
மெக்.பாஸ், காலி.பாஸ், நேட்.சல், நேட்.மூர்
|
12
|
நீரிழிவு (சர்க்கரை நோய்)
|
கல்.பாஸ், நேட்.பாஸ், காலி.பாஸ், பெர்.பாஸ், நேட்.சல்
|
13
|
மாதவிடாய்
|
மெக்.பாஸ், காலி.பாஸ், நேட்.மூர்
|
14
|
சைனஸ்
|
கல்.பாஸ், மெக்.பாஸ், நேட்.மூர்
|
15
|
இரத்த சோகை
|
கல்.பாஸ், காலி.பாஸ், பெர்.பாஸ், நேட்.மூர்
|
16
|
சுகப்பிரசவம்
|
கல்.பாஸ், காலி.பாஸ், மெக்.பாஸ், கல்.ப்ளூ
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக