யோக முத்திரைகளும் அதன் பயன்களும்
யோகாசனம் ஒரு அற்புதமான கலை. தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும். யோகாவில் மற்றும் ஒரு அம்சம் முத்திரைகள். கை விரல்களால் செய்வது முத்திரைகள்.
நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள். பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் உண்டாக்கப்பட்டது. நம் உடலும் பஞ்ச பூதங்கள் அடங்கியதுதான். நம் கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூதத்தை குறிப்பதாக உள்ளது.

கட்டை விரல் – நெருப்பையும்,
ஆள்காட்டி விரல் – காற்றையும்,
நடுவிரல் – வானத்தையும்,
மோதிர விரல் – நிலத்தையும்,
சிறு விரல் – நீரையும் குறிக்கின்றன.
இந்த பஞ்ச பூதங்கள் சம நிலையில் இருக்கும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. இதன் சமநிலையில் மாற்றம் ஏற்ப்பட்டால் நோய்கள் ஏற்ப்படுகின்றது. முத்திரைகள் செய்வதன் மூலம் பஞ்சபூத சக்திகளை சமநிலைப் படுத்தலாம்.
இந்த முத்திரைகளை வஜ்ராசனம், பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது அதிக நன்மை அளிக்கும். தினந்தோறும் 10 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அஞ்சலி முத்திரை:-
நாம் இரு கைகளையும் கூப்பி இறைவனை அல்லது பெரியவர்களை வணங்குகிறோம் அல்லது வணக்கம் சொல்கின்றோமே அதுதான் அஞ்சலி முத்திரை எனப்படும்.
இரு கரங்களையும் ஒன்றோடொன்று வைத்து விரல்களுக்கு நடுவே இடைவெளி இன்றி ஒட்டியிருக்க வேண்டும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். கைகளை மார்புப் பகுதியில் இருக்கும்படி வைத்திருக்க வேண்டும்.

பலன்கள் :-
1. அலைபாய்கின்ற மனதை ஒருமுகப்படுத்தும்.
2. உடலில் உள்ள அனைத்து சக்தியோட்ட பாதைகளையும் சமநிலைப் படுத்தும்.
3. உடல் முழுவதும் பிராண சக்தி நன்றாக பரவும்.
4. மனதில் தோன்றும் கோபம், வெறுப்பு, கவலை போன்ற உணர்வுகள் நீங்கி அன்பு,கருணை மற்றும் அமைதி நிலையை உண்டாகும்.
5. இறைவன் மீது பக்தியும் மற்றவர்கள் மீது மரியாதை உணர்வும் அதிகரிக்கும்.
6. உடலில் இரத்த ஓட்டமும் பெப்ப நிலையும் சீரடையும்.
அஞ்சலி முத்திரையை நின்றுகொண்டும் அல்லது அமர்ந்து கொண்டு பத்மாசனத்திலும் செய்யலாம் முடியாதவர்கள் சுகாசனத்தில் அமர்ந்து செய்யலாம். 10 முதல் 20 நிமிடங்கள் செய்யலாம்.

சின் முத்திரை அல்லது ஞான முத்திரை:
கட்டை விரல் நுனியும் ஆள்காட்டி விரல் நுனியும் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்:-
1.மனதை ஒருநிலைப்படுத்தும்.
2.மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும்.
3.ஞாபக சக்தி அதிகாரிக்கும்.
4.மனநோய், மனக்குழப்பம் தீரும்.
5.குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
6.தலைவலி நீங்கும்.
7.தூக்கமின்மை குணமாகும்.
8.கவலை, கோபம் ஆகியவை விலகும்.
9.தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
10.மன அமைதி உண்டாகும்.
11.பிட்யூட்டரி சுரப்பி நன்றாக செயல்படும்.
12. இது மாணவர்களுக்கு முக்கியமான முத்திரை.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது
சிறப்பு. வயதானவர்கள், ஆசனநிலையில் அமர
முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். தொடர்ந்து 40 நிமிடம் செய்ய
முடியவில்லை என்றால் காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.
ஆகாய முத்திரை:-
பெருவிரல் நுனியும் நடுவிரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருக்க
வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்:-
1.ஆன்மீக ஆற்றல் அதிகரிக்கும்.
1.எலும்புகள் மற்றும் பற்க்கள் வலுவடையும்;
3.இதய நோய்கள் இரத்த அழுத்தம் குணமடையும்.
4.உடல் கழிவுகள் வெளியேறும்.
5.ஒற்றைத் தலைவலி குணமாகும்.
6.காது சம்மந்தமான நேய்கள் குணமாகும்.
7.காதடைப்பு நீங்கும் கேட்கும் திறன் அதிகரிக்கும்.
8.மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும்.
9.எழும்பு தேய்மானம், மூட்டுவலி, கால்சியம் குறைபாடு நீங்கும்.
10.உடலில் ஜீவகாந்த ஆற்றல் பெருகும்
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது சிறப்பு. வயதானவர்கள், ஆசனநிலையில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். தொடர்ந்து 40 நிமிடம் செய்ய முடியவில்லை என்றால் காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.

பிருத்திவி முத்திரை:-
மோதிர விரல் நுனியும் கட்டை விரல் நுனியும் ஒன்றை ஒன்று தொடவேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்:-
1.உயிர்ஆற்றல் அதிகரித்து உடல் வலிமை அடையும்.
2.முடிஉதிர்வைப் போக்கும்.
3.உடல் சோர்வும் மனச்சோர்வும் நீங்க்கும்.
உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
4.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
5. தோல் சம்மந்தமான நோய்கள் குணமடையும்.
6.சிந்தனைத் தெளிவடையும்.
7.ஆஸ்துமா, சைனஸ் நோய் கட்டுப்படும்.
8.ஜீரண சக்தி அதிகரிக்கும்.
9.வாயுத் தொல்லை நீங்கும்.
10.உடல் வெப்பநிலை சமனடையும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது
சிறப்பு. வயதானவர்கள், ஆசனநிலையில் அமர
முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். தொடர்ந்து 40 நிமிடம் செய்ய
முடியவில்லை என்றால் காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.
வருண முத்திரை:
சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும்.
மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
1.தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
2.தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தெடுக்கப்படும்.
3.சிறுநீரக கோளாறுகள் அகலும்
4.நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்
5.உடல் வெப்பநிலையை சமப்படுத்தும்
6.ரத்த ஓட்டம் சீராகும்
7.தாகம் குறையும்
8.சதைப்பிடிப்பு நீங்கும்
9.குடல் அழற்சி நீங்கும்
10.தோல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
11.கோடையில் ஏற்ப்படும் கொப்பளங்கள் நீங்கும்.
12.அம்மை நோய் வருவதை தடுக்கும்.
(மழை காலம், குளிர் காலங்களில் 10 நிமிடங்கள் செய்தால் போதும்.
மற்ற நேரங்களில் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்)
வியான முத்திரை:-
ஆள்காட்டி விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரலை தொட்டுக்
கொண்டிருக்க வேண்டும். . மற்ற இரண்டு விரலும் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்:_
1.தூக்கமின்மை, தலைபாரம் ஆகியவற்றைப் போக்கும்.
2.தொண்டைக் கட்டடைப் போக்கும், குரல் இனிமை அடையும்.
3.தைராய்டு சுரப்பி நன்றாக செயல்பட்டு தைராய்டு குறைபாட்டைப் போக்கும்.
4.இரத்த அழுத்தம், படபடப்பு ஆகியவற்றைப் போக்கும்.
5.தலைவலி தலைசுற்றல் ஆகியவற்றைப் போக்கும்.
6.இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும் இரத்த சோகையை போக்கும்.
7.கண் எரிச்சல் உள்ளங்கை உள்ளங்கால் எரிச்சல் ஆகியவற்றைப் போக்கும்
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது
சிறப்பு. வயதானவர்கள், ஆசனநிலையில் அமர
முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். தொடர்ந்து 40 நிமிடம் செய்ய
முடியவில்லை என்றால் காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.
பிராண முத்திரை:
மோதிர விரல், சுண்டு விரல் நுனிகள் இரண்டும், கட்டை விரலின் நுனியை
தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
1. கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும்.
2.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
3.புற்று நோய்க் கட்டிகள் நீ்ர்க்கட்டிகளின் தீவிரத்தைக் குறைக்கும்.
4.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
5.கண் சம்மந்தமான நோய்கள் குணமாகும்
6.களைப்பு நீங்கும்
7.நரம்புத் தளர்ச்சி நீங்கும்
8.பக்கவாதம் குணமாகும்
9.நினைவாற்றல் அதிகரிக்கும்
10.ஆஸ்துமா, சுவாச நோய்கள் குணமாகும் .
11.திக்குவாய் பேச்சு தெளிவின்மை ஆகியவற்றைப் போக்கும்.
12.கைகால் நடுக்கம் நடையில் தள்ளாட்டம் ஆகியவற்றைப் பேக்கும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது
சிறப்பு. வயதானவர்கள், ஆசனநிலையில் அமர
முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். தொடர்ந்து 40 நிமிடம் செய்ய
முடியவில்லை என்றால் காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.
வாயு முத்திரை:-
ஆள்காட்டி விரலை மடக்கி பெருவிரலுக்கு அடியில் வைத்து லேசான அழுத்தம்
கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்:
1.வாயு தொந்தரவினால் ஏற்படும் வயிற்றுவலி நெஞ்செரிச்சல் ஆகியவற்றைப் போக்கும்.
2.இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரித்து உடலுக்கு ஆற்றலை அதிகரிக்கும்.
3.பக்க வாதம் முகவாதம் ஆகியவற்றை கட்டுப் படுத்தும்.
4.தசைப்பிடிப்பு, சுளுக்கு ஏற்ப்படாமல் பாதுகாக்கும்.
5.மூட்டுவலி குணமாகும்.
6.குதியங்கால்வலி பித்த வெடிப்பு குணமாகும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது
சிறப்பு. வயதானவர்கள், ஆசனநிலையில் அமர
முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். தொடர்ந்து 40 நிமிடம் செய்ய
முடியவில்லை என்றால் காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.
சூன்ய முத்திரை:
நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை
விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள் :-
1.இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும்.
2.எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும்.
3.தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
4.காதுகளின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.
5.பஞ்சபூத சக்திகள் சமநிலை அடையும்.
6.காது சம்மந்தமான குரைபாடு உடையவர்கள் 40 நிமிடம் வரை செய்யலாம் மற்றவர்கள்
10 நிமிடங்களுக்கு மேல் செய்ய வேண்டாம்.
7.எந்தப்பக்கக் காது குறைபாடு உள்ளதோ அந்தப்பக்க கையில் மட்டும் செய்தால்
போதும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது
சிறப்பு. வயதானவர்கள், ஆசனநிலையில் அமர
முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். தொடர்ந்து 40 நிமிடம் செய்ய
முடியவில்லை என்றால் காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.
சூரிய முத்திரை:
மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும்.
மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்:-
1.வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும்.
2.உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.
3.தொப்பை குறையும்.
4.கொழுப்பை குறைக்கும்
5.உடல் பருமன் குறையும்
6.தைராய்டு சுரப்பி ஆற்றல் அதிகரிக்கும்
7.ரத்தக் குழாய்களில் அடைப்பு நீங்கும்
8.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
9.பார்வைத் திறன் அதிகரிக்கும்
10.களைப்பைப் போக்கும்.
11.ஆஸ்துமா,பீனிசம் ஆகியவை கட்டுப்படும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது
சிறப்பு. வயதானவர்கள், ஆசனநிலையில் அமர
முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். தொடர்ந்து 40 நிமிடம் செய்ய
முடியவில்லை என்றால் காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.
நாஷக் முத்திரை:-
சுண்டுவிரலை மடக்கி பெருவிரலுக்கு அடியில் வைத்து லேசான அழுத்தம் கொடுக்க
வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்:-
1.சளி, இரும்பல், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல் ஆகியவற்றைப் போக்கும்.
2.சிறுநீர் சம்மந்தமான நோய்கள் குணமாகும்.
3.உடலில் நீரின் அளவை சமன்படுத்தும்.
4.உள்ளங்கை, உள்ளங்காலில் ஏற்படும் அதிக வியர்வையைப் போக்கும்.
5.மாதவிடாய்ப் பிரச்சனைகள் தீரும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது
சிறப்பு. வயதானவர்கள், ஆசனநிலையில் அமர
முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். தொடர்ந்து 40 நிமிடம் செய்ய
முடியவில்லை என்றால் காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.
அபான வாயு முத்திரை:-
ஆள்காட்டி விரலை மடித்து உள்ளங்கையில் வைக்க வேண்டும். பின்பு நடுவிரல்
நுனியும் மோதிரவிரல் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
சுண்டுவிரல் நீண்டிருக்க வேண்டும்.
1.நரம்பு சம்மந்தமான நோய்கள் குணமாகும்.
2.மன அழுத்தம் மன இருக்கம் போன்ற பிரச்சனைகள் தீரும்.
3.மலச்சிக்கல் தீரும், சிறுநீர்ப் பிரச்சனை தீரும்.
4.தலைவலி மற்றும் கழுத்துவலி குணமாகும்.
5.இதயம் சம்மந்தமான நோய்களை குணமாக்கும் இதயத் துடிப்பை சீராக்கும்.
6.இரத்தஅழுத்தத்தைக் குறைக்கும்.
7.லோ பிரசர் (குறை இரத்த அழுத்தம்) இருப்பவர்கள் செய்ய வேண்டாம்.
8.இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஒரு ஆறு மாதம் வறை செய்யய
வேண்டாம்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது
சிறப்பு. வயதானவர்கள், ஆசனநிலையில் அமர
முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். தொடர்ந்து 40 நிமிடம் செய்ய
முடியவில்லை என்றால் காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.
சங்கு முத்திரை:-
முதலில் இடது கட்டை விரலை வலது உள்ளங்கையில் வைத்து கட்டை விரலை தவிர மற்ற
வலது கை விரல்களால் இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். வலது பெருவிரல் இடது கையின்
மற்ற நான்கு விரல்களைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இப்போது சங்கு போன்ற
அமைப்பு கைகளில் உருவாகி இருக்கும். வலது கையின் பெரு விரலுக்கும் ஆள்காட்டி
விரலுக்கும் இடையே சங்கின் வாய் போன்ற ஒரு அமைப்பு உருவாகி இருக்கும்.
பலன்கள்:-
1.தொண்டை சம்மந்தமான நோய்கள் குணமாகும்.
2.ஜீரணசக்தி அதிகரிக்கும்.
3.வாயு தொடர்பான நோய்கள் குணமாகும்.
4.வயிற்றுவலி குடல் நோய்கள் குணமாகும்.
5.திக்குவாய் தொண்டை நோய்கள் குணமாகும்.
6.நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தும் சிறப்பாக செயல்படும்.
7.தூக்கமின்மையை போக்கும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்..வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது
சிறப்பு. வயதானவர்கள், ஆசனநிலையில் அமர
முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். தொடர்ந்து 40 நிமிடம் செய்ய
முடியவில்லை என்றால் காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.
லிங்க முத்திரை:-
இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும்
நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
பலன்கள் :
1.உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும்.
2.கபத்தை அகற்றும்.
3.ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும்.
4.வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.
5.நுரையீரலை வலுப்படுத்தும்
6.காய்ச்சல் குணமாகும்
7.உடல் புத்துணர்ச்சி அடையும்
8.உடல் எடையைக் குறைக்கும்.
9.உடலில் உள்ள கொலுப்பை கரைக்கும்.
10.ஒவ்வாமை நீங்கும்.
11.கோபம், கவலை, பொறாமமை போன்ற தீய எண்ணங்களைப் போக்கி மனதை
சாந்தப்படுத்தும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது
சிறப்பு. வயதானவர்கள், ஆசனநிலையில் அமர
முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். தொடர்ந்து 40 நிமிடம் செய்ய
முடியவில்லை என்றால் காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.
முகுள முத்திரை:-
நான்கு விரல்களையும் கட்டைவிரலோடு இணைத்து குவித்து வைக்க வேண்டும். இதுவே
முகுள முத்திரையாகும்.
பலன்கள்:-
மனம் சம்மந்தமான நோய்கள் குணமாகும்.
உடல் சோம்பலைப் போக்கி உடல் சுறுசுறுப்படையும்.
இந்த முத்திரையை நோய் பாதிக்கப்பட்ட இடத்தில் அல்லது வலியுள்ள இடத்தில்
இம்முத்திரையை வைத்து கண்களை மூடி பாதிக்கப்பட்ட இடத்தையே சிந்திக்க வேண்டும்.
மூச்சு ஒரே சீராக இருக்க வேண்டும். பத்து நிமிடம் முதல் 40 நிமிடம் வரை செய்யலாம்.
ஒரே நாளில் பலமுறை செய்யலாம்.
வலது கையில் மட்டுமே செய்ய வேண்டும்.
உடல் நிலை சரியில்லாதவர்கள் படுத்துக்கொண்டும் செய்யலாம்.
வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் நோய் மற்றும் வலி உள்ள இடத்தில்
இம்முத்திரையை வைத்து நோயின் தீவிரத்தை குறைக்கலாம். மற்றவர்களூக்கு இம்
முத்திரையை பயன்படுத்தும் போது ஒரு பாத்திரத்தில் நீரை வைத்திருந்து முத்திரையை
செய்து முடித்ததும் கைகளை அதில் நனைக்க வேண்டும்.
ருத்ர முத்திரை :
கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிப்
பகுதிகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும். நடு விரலும் சுண்டு விரலும் நேராக இருக்க
வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் செய்யலாம்.
பலன்கள் :
1.ரத்த ஓட்டம் சீராகும்
2.தூய சிந்தனைகள் ஏற்படும்
3.கண் குறைபாடுகள் நீங்கும்
4.சுவாசம் சீராகும்
5.இரத்த அடைப்பு நீங்கும்
6.மண்ணீரல், கல்லீரல் உறுப்புகள் வலுப்பெறும்
7.உயிர் ஆற்றல் அதிகரிக்கும்
8.தலைவலி தலைசுற்றல் நீங்கும்
9.ஜீரணசக்தி அதிகரிக்கும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது
சிறப்பு. வயதானவர்கள், ஆசனநிலையில் அமர
முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். தொடர்ந்து 40 நிமிடம் செய்ய
முடியவில்லை என்றால் காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.
சுத்த முத்திரை:-
கட்டை விரலால் மோதிர விரலின் மூன்றாவது ரேகையை ஒட்டி மேலே பக்கவாட்டில் தொட
வேண்டும். சிறிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனை ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும்
செய்ய வேண்டும்.
விரதம் இருக்கும் நாட்க்களில் செய்தால் அதிகமான பலன் கிடைக்கும்.
எளிய திரவ உணவுகளை எடுத்துக்கொண்டு இம்முத்திரை செய்தால் கூடுதல் பலன்
கிடைக்கும்.
உடலில் உள்ள எல்லா விதமான 1.நச்சுப்பொருள்களும் வெளியேற்றப்படும்.
2.உடல்வலி, மனம், ஆன்மா அனைத்தும் சுத்தமடையும்.
3.நோய்கள் குணமாகும்
4.உடல் புத்துணர்ச்சி பெரும்
5.வயிறு மலக்குடல் சிறுநீரகம் சுத்தமடையும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது
சிறப்பு. வயதானவர்கள், ஆசனநிலையில் அமர
முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். தொடர்ந்து 40 நிமிடம் செய்ய
முடியவில்லை என்றால் காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.
கணேஷ் முத்திரை:-
இரு கைகளையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து படத்தில் உள்ளதுபோல் வைத்துக் கொள்வதே
கணேஷ் முத்திரை ஆகும்.
பலன்கள்
1.ரத்தம் சுத்தமாகும்.
2.இரத்த அழுத்தம் நீங்கும்.
3.நுரையீரல் நன்கு செயல்படும்.
4.நரம்பு மண்டலத்தின் ஆற்றல் அதிகரிக்கும்.
5.தேள்பட்டை நெஞ்சுப்பகுதி உறுதியடையும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது
சிறப்பு. வயதானவர்கள், ஆசனநிலையில் அமர
முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். தொடர்ந்து 40 நிமிடம் செய்ய
முடியவில்லை என்றால் காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.
கருட முத்திரை:-
இடதுகை பெருவிரலையும் வலதுகை பெருவிரல்களையும் ஒன்றாக இறுகப் பற்றி, மற்ற விரல்கள்
அனைத்தையும் நேராக விரித்தால் இதுவே கருட முத்திரையாகும். இதனை பத்து முதல் பதினைந்து
நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்:-
1.உயிர் ஆற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.
2.ஞாபகமறதியைப் பொக்கி நினைவாற்றல் பெருகும்.
3.பார்வைத் திறனும் கேட்கும் திறனும் அதிகரிக்கும்.
4.கோபம்,வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு ஆகிய தீய குணங்கள் மறையும்.
5.நரம்பு மண்டலம் உறுதியடையும்.
இம்முத்திரையை 10 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது
சிறப்பு. வயதானவர்கள், ஆசனநிலையில் அமர
முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.
ஆதி முத்திரை:-
பெருவிரலை மடக்கி சுண்டுவிரலின் கடைசி ரேகையை தொடுமாறு வைத்து மற்ற நான்கு
விரல்களால் மூடிக்கொள்ள வேண்டும். இதுவே ஆதி முத்திரை எணப்படும். தாயின் கருவில்
இருக்கும் குழந்தை இவ்வாறு கைகளை மூடியபடி இம்முத்திரை போன்று இருப்பதால் ஆதி
முத்திரை என அழைக்கப்படுகின்றது.
பலன்கள்
1.கண், காது, பல் வலிகளை போக்கும்.
2.மனக் குழப்பம், அதிர்ச்சி, படபடப்பு ஆகியவற்றை சரிசெய்யும்.
3.தேவையற்ற கவலை பயம் ஆகியவற்றைப் போக்கும்.
4.சுவாசம் மூச்சுத்தினறல் ஆகியவற்றை சீர்படுத்தும்.
5.தீய எண்ணங்களை போக்கி மனதை சுத்தப்படுத்தும்.
இம்முத்திரையை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனத்தில் செய்வது
சிறப்பு. வயதானவர்கள், ஆசனநிலையில் அமர
முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். தொடர்ந்து 40 நிமிடம் செய்ய
முடியவில்லை என்றால் காலையில்20 நிமிடமும் மாலையில்20 நிமிடமும் செய்யலாம்.வஜ்ர முத்திரை :-
நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்று விரல்களையும் மடக்கி கட்டை விரலை நடுவிரல் நகத்தின் அருகே வைக்கவேண்டும். ஆட்காட்டி விரல் நீட்டிக்கொண்டிருக்க வேண்டும்.
பலன்கள் :-
1. உடல் வஜ்ரம்போல் பலம்பெரும்.
2. சோர்வு,மயக்கம் நீங்கும்.
3. ஜீரண சக்தி அதிகரிக்கும்.
4. இரத்த ஓட்டம் சீராகும்.
5. இதயம் பலம்பெரும்.
6. கல்லீரல்,மண்ணீரல் ஆற்றலை அதிகரிக்கும்.
7. இரத்தத்தில் சர்க்கரை அளவு சமநிலை அடையும்.
பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் தினமும் 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்
காக்கினி முத்திரை :-
இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிமையாக செய்யும் முத்திரை ஆகும். வலதுகை விரல்கள் நுனியும் இடதுகை விரல்கள் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு விரலுக்கும் இடையில் ஒன்றை ஒன்று தொடதவாறு இடைவெளி இருக்க வேண்டும்.பலன்கள் :-
1. ஒரு செயலில் ஈடுபடும்போது அந்த செயலில் மனம் ஒன்றாமல் தடுமாற்றம் ஏற்ப்பட்டால் ஒரு பத்து நிமிடம் இந்த முத்திரையை செய்தால் போதும் மனம் ஒறுமுகப்பட்டு செயலில் நன்றாக ஈடுபாடு செலுத்த முடியும்.
2. ஆசிரியர் பாடம் நடத்தும் போது இந்த முத்திரையை செய்தால் மாணவர்கள் பாடத்திட்டத்தில் முழுக் கவனம் செலுத்த முடியும்.
3. சில விஷயங்களை மறந்துவிட்டு தவிக்கும் போது இந்த முத்திரையை செய்தால் உடனே மறந்து போனவை ஞாபகத்திற்கு வரும்.
4. இந்த முத்திரையை செய்யும் போது மூளை செல்கள் அனைத்தும் நன்றாக தூண்டப்பட்டு மூளையின் திறன் அதிகரிக்கும்.
5. ஞாபகமறதி உடையவர்கள் மன அழுத்தம் உடையவர்கள் இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தினமும் 10 முதல் 20 நிமிடங்கள் செய்வது நலம்.
பங்கஜ முத்திரை :-
பங்கஜம் என்றால் தாமரை என்று பொருள் இம்முத்திரை தாமரை போல் காட்சியளிப்பதால் பங்கஜ முத்திரை என்று அழைக்கிறோம்.இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று குவித்து இரண்டு கை பெருவிரல்கள் மற்றும் சுண்டு விரல்கள் மட்டுமே ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் ஒன்றையொன்று தொடாமல் விரிந்து சற்று வளைந்து இருக்க வேண்டும்.
பலன்கள் :-
1. மனதில் தோன்றும் கோபம், பொறாமை, வெறுப்பு, ஆணவம் போன்ற தீய எண்ணங்களை போக்கி மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றச் செய்கின்றது.
2. மனதில் மென்மையும் அமைதியும் நிம்மதியும் உண்டாகும்.
3. உடலில் அழகும் பளபளப்பும் உண்டாகும்.
4. நரம்பு மண்டலம் ஜீரண மண்டலம் வலுப்பெறும்.
5. உடலில் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறும்.
6. கழுத்து வலி முதுகு வலி காய்ச்சல் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.
7. இம்முத்திரை செய்யும்போது சிலருக்கு சளி அல்லது லேசான வயிற்றுப் போக்கு உண்டாகும் அதனால் ஒரு ஆபத்தும் இல்லை. அதிகமாக தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறுவதற்கான அறிகுறியே.
இந்த ஆசனத்தை 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம் அதற்குமேல் செய்யக்கூடாது.
இந்த ஆசனத்தை பத்மாசனம், சுகாசன நிலையில் செய்யலாம். முடியாத வயதானவர்கள் படுத்துக்கொண்டும் செய்யலாம்.
வாழ்க வளமுடன்!
வாழ்க பல்லாண்டு!

Super... thodaravum!!!
பதிலளிநீக்கு