இராஜ யோகம் (RAJA YOGAM)
தன்னை அறிதல் என்பதே தியானத்தின் குறிக்கோள். தன்னை அறிந்தவன் இறைவனை அறிந்தவனாகிறான். தன் மனத்தைக் கட்டுப்படுத்தக் கூடியவன் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் கட்டுப்படுத்தக் கூடியவனாக விளங்கு வான், தன்னை அறிதல் என்பது இறைவனை அறிதல். தன்னை அறிய, பல சாதனைகளை மேற்கொள்ளலாம். ஜபம், கர்மா, பக்தி, தியானம், ஞானம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றினைக் கடைப்பிடித்துத் தன்னுள் இருக்கும் ஆத்ம சக்தியை அல்லது தெய்வீக சக்தியை அறிய முடியும். இதைக் குண்டலினி சக்தி என்றும் அழைக்கலாம்.குண்டலினி சக்தியானது மூலாதார சக்கரத்திலிருந்து . வெளிப்படுகிறது. இந்தச் சக்தி மேலெழுந்து சகஸ்ரா சக்கரத்தை வந்தடையும் போது அவருக்கு அனைத்துச் சித்தி களை அறியும் சக்தியும் இறைவனிடம் இரண்டறக் கலக்கும் 'சக்தியும் தென்படும். இந்தச் சக்திகளை அடைய மனிதன் கீழ்கண்ட எட்டுவிதமான நிலைகளை அடைய வேண்டும் என்று ராஜயோகத்தில் கூறப்பட்டுள்ளது.
அஸ்டாங்க யோகம் :-
1.இயமம் :
எண்ணத்தாலும்,சொல்லாலும், செயலாலும் பிற உயிர்களை மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ துன்புறுத்தாமை, பிறர்பால் அன்பு, கருணை, இரக்கம் கொள்வது, சத்தியம் தவறாமலிருப்பது, மற்றவர்
பொருள்கள் மீதும் ஆடம்பர பொருள்கள் மீதும் ஆசை கொள்ளாமலிருப்பது போன்ற வற்றைக் கடைப்பிடித்தல் வேண்டும்.

2.நியமம் :
இது தகும் இது தகாது என்று பகுத்தறிவது. அமைதி,தூய்மை,மனநிறைவை கடைபிடித்தால், அகமும், புறமும் சுத்தமாயிருத்தல், தெய்வீக நூல்களைப் படித்தல், ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேட்டல், தெய்விக வேலைகளில் ஈடுபடுதல், இறைவன் நாமத்தைச் சிந்தையில் கொள்ளுதல்.
3.ஆசனம் :
தியானம் செய்வதற்கு முன்பு தினமும் தன்னால் முடிந்த யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.
4.பிராணாயாமம் :
மூச்சுப் பயிற்சிகளை முறையாகக் குருவிடம் பயின்ற பிறகு தினமும் இருவேளை அல்லது மூன்று வேளை செய்வது மனத்தை ஒருமுகப்படுத்த ஏதுவா யிருக்கும்.
5.பிரத்யாஹாரம் :
பிரத்யாகாரம் என்பது ஆமையைப் போல் ஐந்து இந்திரியங்களையும் உலக விசயங்களிலிருந்து விடுவித்து உள்ளே இழுத்துக் கொள்வது. அதாவது பார்ப்பதால், கேட்பதால், நுகர்வதால், சுவை அறிதலால், தொடுதல் உணர்வறிவதால் நம் மனம் பாதிக்காமல் பார்த்துக் கொள்வது.
6.தாரணை :
நம் மனத்தை ஒருமுகப்படுத்துவது (Concen tration) நம் மனத்தை உலக விசயங்களிலிருந்து விடுவித்து இறைவன் பால் சேர்ப்பதே ஒருமுகப்படுத்துதல் ஆகும்.
7.தியானம் :
மனத்தை ஒருமுகப்படுத்தி தன்னை உணர்வது. அதாவது ஒருமுகப்படுத்துதலின் முடிவாக, தியானம் அமைகிறது. தன்னை அறிந்து ஆனந்த சோதியில் கலப்பது.
8.சமாதிநிலை:
இந்த சரீர நினைவில்லாமல் ஆத்ம நிலையில் இருப்பது. தியானத்தை மறந்து பரமாத்வாவுடன் கலப்பது. இந்த நிலை அடையும்போது குண்டலினி சக்தி ஆறு நிலையைத் தாண்டி ஏழாவது நிலைக்கு சென்று அடைகிறது.
மூச்சுப் பயிற்சி:-
மூச்சுப் பயிற்சி என்பது இந்தச் பரு உடலையும், சூட்சும உடலையும் சமநிலைப்படுத்த ஏதுவாகயிருக்கும். மூச்சுப் பயிற்சியின் மூலம் நாம் உள்ளிழுக்கும் மற்றும் வெளியிலே விடும் காற்றை ஒரு குறிப்பிட்ட முறையில் அடக்குவதன் மூலம் இந்த பரு உடலும், மனசு என்ற சூட்சும உடலும் கட்டுப்படுத்தப்படும். மூச்சை அடக்கி ஆள்வதன் மூலம் ஆத்ம ஞானத்தை அறியலாம். மேலும் அட்டமா சித்தி களையும் பெறலாம். நாம் ஒவ்வொரு நாளும் 21,600 முறை சுவாசிக்கிறோம். மூச்சை அடக்கி ஆள்வதன் மூலம் நம்முடைய அன்றாட சுவாசத்தின் எண்ணிக்கை 21,600 லிருந்து குறையும் போது நம்முடைய வாழ்நாள் கூடும் மற்றும் நோயற்ற வாழ்க்கை அமையும் என்பது உறுதி.
சுலபமாகச் செய்ய முடிகின்ற சுகாசனம் அல்லது பத்மாசனம் (அல்லது) வச்சிராசனம் போன்ற ஏதாவது ஓர் ஆசனத்தில் அமர்ந்து கண்கள் திறந்த நிலையில் வலது கைக் கட்டைவிரலால் வலது மூக்கின் துவாரத்தை அடைத்துக் கொண்டு இடது மூக்கின் துவாரத்தின் வழியாகக் காற்றை முடிந்தவரை உள்ளே இழுத்து பிறகு இடது மூக்கை வலது கை மோதிரவிரலால் மூடிக்கொண்டு உள்ளே இழுத்த காற்றை வலது மூக்கின் மேலே உள்ள கட்டை விரலை நீக்கி வெளியே விடுதல் வேண்டும். அதே மூக்கில் மீண்டும் காற்றை உள்ளே இழுக்க வேண்டும். இவ்வாறு இடது பக்கமும் வலது பக்கமும் மாறிமாறி செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதால் மனம் சமநிலை அடையும். இரத்த ஓட்டம் சீராக ஓடும். உடல் வெப்பம் சீராக இருக்கும். தியானம் செய்தால் மனம் ஒருநிலைப்படும்.

தியானம் :-
தியானம் செய்ய விரும்பும் சாதகன் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்தல் வேண்டும். தன் வீட்டில் ஓர் அறையை அல்லது ஓர் இடத்தை இதற்கெனத் தேர்வு செய்து அந்த இடத்தில் தியானம் செய்தல் வேண்டும். வேறு எந்தக் காரியமும் அந்த அறையில் செய்யலாகாது. அதாவது அந்த அறை தியான அறையாக மட்டும்தான் இருக்க வேண்டும். அந்த அறையைத் தினமும் சுத்தம் செய்து தூப தீபங்கள் காட்டி இட்ட தெய்வத்திற்குப் புட்ப பரிமளங்கள் சாத்தி நைவேத்தியம் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த அறைக்குள் நுழைந்தால் நாம் பேரானந்தம் அடையவும் மிக விரைவாக தியானத்தில் ஈடுபடவும் யோக சக்திகளைப் பெறவும் ஏதுவாகயிருக்கும்.
தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்வது அவசியம் முடிந்தவரை பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 3 மணிமுதல் 6 மணிவரை தியானம் செய்தல் நன்று. மாலையில் அந்தி வேளையில் தியானம் செய்வதும் நல்லது.

அமரும் முறை:-
தியானத்தின் போது நாம் கிழக்கு முகமாகப் பார்த்து அமர்வது நல்லது. வடக்கு முகமாகவும் வடகிழக்கு முகமாகவும் அமர்ந்து தியானம் செய்யலாம். தியானத்தின் போது முடிந்தவரை இடையே எழுந்து வேறு காரியங்கள் செய்து மறுபடியும் தியானம் செய்தல் கூடாது. குறைந்தது 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து தியானம் செய்தல் அவசியம். மற்றவர்கள் இடையூறு செய்யாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
'ஸ்ரீமத் பகவத்கீதையில் 6-ஆம் அத்தியாயத்தில் 11-ஆவது சுலோகத்தில் ஒரு சாதகன் தியானம் செய்ய வேண்டிய இடம் எப்படி இருக்க வேண்டும் என்று பின்வருமாறு கூறுகிறார். “தியானம் செய்ய வேண்டிய இடம் சுத்தமாக இருக்க வேண்டும். மிக உயரமாகவோ, அதிக தாழ்வாகவோ இருக்கக் கூடாது, உறுதியாக இருத்தல் வேண்டும். துணி, மான்தோல், தர்ப்பை இவைகளைக் கொண்ட ஆஸனத்தை நன்கமைத்துக் கொண்ட ஆஸனத்தில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி, மனம் இந்திரியங்கள் இவைகளின் செயலை அடக்கி, சித்த சுத்தியின் பொருட்டு யோகம் பயிலுக. தேகம், தலை, கழுத்து இவைகளை நேராக அசையாது வைத்துக் கொண்டு மூக்கு நுனியைப் பார்ப்பது போலிருந்து வெளி விஷயங்களைப் பாராதிருத்தல் வேண்டும் என கூறப்படுகிறது .

குண்டலினி யோகத்திற்கு அடிப்படையான ஏழு ஆதாரச் சக்கரங்கள்:-
1.மூலாதாரச் சக்கரம் Base Chakra:-
நான்கு இதழ்களை கொண்டது மூலாதாரச் சக்கரம்.
நிறம் : சிகப்பு
அதிபதி : கணபதி வாலை
இது ஆண் குறி அல்லது பெண் குறிக்கும் மலத் துவாரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. புரோஸ்டேட் என்ற நாளமில்லா சுரப்பி சுரக்கும் இடம் இதுவாகும். உடலுக்கு தேவையான அக்கினி இங்கே உற்பத்தியாகிறது.
இந்த மூலாதாரச் சக்கரம் சரிவர இயங்கினால் தலைவலி, காய்ச்சல், சிறுநீரக கோளாறுகள், இரத்த அழுத்தம், மலச்சிக்கல்.பேதி,மூலநோய் இன்னும் பல நோய்களில் இருந்து விடுபடலாம்.
இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது!
இந்த சக்கரத்தை இயக்குவதன் மூலம் தனது மனதையும் மூச்சையும் அடக்கி ஆள்வான்.

2.சுவாதிஸ்டான சக்கரம் Sex Chakra :-
இந்த சக்கரம் ஆறு இதழ்களை கொண்ட தாமரை பூ போன்றது.
ஆரஞ்சு நிறம் கொண்டது.
அதிபதி : பிரம்மா மற்றும் சரஸ்வதி.
இந்த சக்கரம் மனித தண்டுவடத்தில் ஆண் குறி அல்லது பெண் குறி அமைந்துள்ள இடத்துக்கு நேர் பின்புறம் அமைந்துள்ளது.
இது அட்ரீனல் என்னும் நாளமில்லா சுரப்பி சுரக்கும் இடமாகும்.
இது ஆண் அல்லது பெண் தன்மை பிரச்சனை ,குழந்தை இன்மை, மலட்டுத் தன்மை பிரச்சனைகளை தீர்க்கிறது.
உடலில் உள்ள 72000 நாடி நரம்புகளின் இயக்கத்தை கட்டுப்படுத்துவது இதுவே ஆகும். இந்த சக்கரம் காதல், நட்பு, பாசம்,சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளை பலப்படுத்தும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை அதிகரிக்கும்.
தச நாடிகள் எனப்படும் 1.இடைகலை 2.பிங்கலை 3.சுழிமுனை 4.காந்தாரி 5.அத்தி 6.சிங்குவை 7.அலம்படை 8.புருடன் 9.குருவை 10.சங்கினி
போன்ற நாடிகளின் ஆற்றலை அதிகரிக்கிறது.
சுவாதிஸ்டான சக்கரம் ஆண்களுக்கு வடமிருந்து இடமாகவும் பெண்களுக்கு இடமிருந்து வலமாகவும் சுழல்கிறது.
சுவிதிஸ்டானத்தில் தியானம் செய்தால் உடல் மிகவும் பலமடையும். எல்லா இடத்திற்கும் சஞ்சரிக்கும் சக்தியை பெருவான். மரணமில்லா பெருவாழ்வு வாழ்வான்.

3.மணிப்பூரகம் Navel Chakra
இந்த சக்கரம் பத்து இதழ்களைக் கொண்ட மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும்.
அதிபதி : விஷ்ணு மகாலட்சுமி.
மணிப்பூரக சக்கரம் தொப்புளின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது. இச்சக்ரத்தில் தியானம் செய்பவர்கள் நோயில்லா பெருவாழ்வு வாழ்வர். மற்றவர்கள் நோயை போக்கும் வல்லமை பெறுவர். இது உடலுக்கு தேவையான நீரை சமநிலைப் படுத்துகிறது.
இதில் தியானம் செய்வதால் சிறுநீரக நோய்கள், கணைய நோய்கள், மண்ணீரல், கல்லீரல், நோய்கள் சர்க்கரை, வியாதி இரத்த அழுத்தம், குடல் நோய்கள் தீர்க்கப்படும்.
இச்சக்கரம் கைவரப் பெற்றவர் தீயில் நடக்கலாம் படுக்கலாம். இரும்பையும் பொன்னாக மாற்றும் இரசவாத சக்தியை அடையாலாம்.

4. அனாகத சக்கரம் Heart Chakra
அனாகத சக்கரம் 12இதழ்கள் கொண்ட கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.
அதிபதி : ருத்ரன்.
இது இதயத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இது தைமஸ் என்னும் நாளமில்லா சுரப்பி சுரக்கும் இடமாகும்.
இது உடலுக்கு தேவையான வெப்பத்தை அளிக்கிறது. இது உடலுக்கு தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்கிறது. இதயம், நுரையீரல் நோய்கள் வராமல் தடுக்கிறது. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் நோய்களை கட்டுப்படுத்தும். இரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது.
இதயத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் கார்டியாக் பிளெக்சஸ் என்னும் நரம்பு மண்டலத்தை வலிமை படுத்துகிறது.
இந்த சக்கரத்தை இயக்குவதன் மூலம் பஞ்சபூத சக்தியான காற்றை வெற்றிகொள்வான். காற்றில் நடக்கவும் பறக்கவும் ஆற்றல் பெறுவான்.

5. விசுக்தி சக்கரம் Neak Chakra
இந்த சக்கரம் 16 இதழ்கள் கொண்ட வைலட் நிறத்தில் காட்சியளிக்கிறது.
அதிபதி மகேஸ்வரன் மகேஸ்வரி.
இந்த சக்கரம் தொண்டையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது தைராய்டு என்னும் நாளமில்லா சுரப்பி சுரக்கும் இடமாகும். இது ஆகாயத்தில் இருந்து உடலுக்கு தேவையான காந்த சக்தியை பெற உதவுகிறது.
இது நடத்தல், ஓடுதல், இருத்தல், கிடத்தல், போன்ற இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
உடல் எடையை சீராக வைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் கிருமிகள் புகாமல் பாதுகாக்கிறது. சுவாசத்தை கட்டுப்படுத்துகிறது.
இச்சக்கரத்தில் தியானிப்பவர் அனைத்து வேதங்களையும் அறிந்தவர் ஆவார். முக்காலங்களையும். அறிந்தவர் ஆவார்.

6. ஆக்ஞை சக்கரம் Atma Chakra
இது இரண்டு இதழ்கள் கொண்ட வெள்ளை நிறம் கொண்ட தாமரைபோல் காட்சியளிக்கும்.அதிபதி : சதாசிவம், மனோன்மணி.
இந்த சக்கரம் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
இது பிட்யூட்டரி என்னும் நாளமில்லா சுரப்பி சுரக்கும் இடமாகும்.
மனதை ஒருநிலைப் படுத்தும் ,கவலை, பயம். கோபம், என மனம் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது. தலைவலி, கண் காது மூக்கு நோய்கள் தீர்க்கும்.
இதைக் கைவரப் பெற்றவர் அஸ்டமா சித்திகளையும் அடைவர். மரணமில்லா பெருவாழ்வு வாழ்வர்.
7. சகஸ்ராரம் சக்கரம் Crowm Chakra
இது ஆயிரம் இதழ்கள் கொண்ட இளம் சிவப்பு வெளிர் ஊதா நிறம் கொண்டதாக காட்சியளிக்கிறது. இது தலையின் உச்சியில் அமைந்துள்ளது. இது பீனியல் என்னும் நாளமில்லா சுரப்பி சுரக்கும் இடமாகும். இதனை சொர்க்கத்தின் திறவுகோல் என குறிப்பிடுவர்.இந்த சக்கரத்தை இயக்குவதன் மூலம் மனிதன் இறைவனோடு ஒன்றி விடுகிறான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக