16.5.17

ஆஸ்துமா - அக்குபஞ்சர் ஹோமியோபதி:-


ஆஸ்துமா - மூச்சுத்திணறல்

    ஆஸ்துமா என்னும் கிரேக்கச் சொல் மூச்சுத்திணறல் அல்லது இரைப்பு என்று பொருள்படும். ஆஸ்துமா என்பது முற்றிலும் சுவாசம் சம்மந்தமான நோய். நுரையீரலுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச்செல்லும் குழாய்கள் பிராஞ்சியல் (Bronchial Tubes) எனப்படும். இக்கழாய்கள் சுருங்குவதாலோ, கடினத்தன்மை அல்லது அடைப்பு ஏற்ப்படுவதால் ஆஸ்துமா நோய் உண்டாகிறது.








ஆஸ்துமா ஏற்படக் காரணங்கள் :-

1. பரம்பரை குரைபாடு அலர்ஜி போன்றவற்றால் ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்புகள் உண்டு
2. அதிக வெப்பம் மற்றும் அதிக குளிர்
3. அதிக தூசுபடிந்த இடங்களில் வசிப்பது
4. பெயிண்ட், பெட்ரோல் போன்ற வாசனை அதிகம் உள்ள சூழலில் வேலை செய்வது.
5. உடலுக்கு ஒவ்வாத சுகாதாரமற்ற உணவுகளை உண்பது.
6. நாய், பூனை, பறவைகள் போன்ற செல்லப் பிராணிகளுடன் பழகுவது; இதன் ரோமங்கள் ஆஸ்துமா நோயை உண்டாக்கும்.
7. பூக்களின் மகரந்தங்கள் வாசனை ஆகியவையும் ஆஸ்துமாவை உண்டாக்கலாம்.
8. மூக்கில் அல்லது தொண்டையில் அடிக்கடி ஏற்படும் தொற்று நோய்கள்.
9. கவலை, மனக்குழப்பம், பரபரப்பு, மன அழுத்தம், ஆகியாவையும் ஆஸ்துமாவை உண்டாக்கலாம்.
10. புகைப்பிடித்தல் மது அருந்துதல்
11. நாள்பட்ட சளி தொடர் இருமல் போன்றவற்றாலும் ஆஸ்துமா ஏற்ப்படலாம்.
12. நாம் சாப்பிடும் மருந்துகளாலும் அதிகமான உடற்பயிற்சி செய்வதாலும் சில சமயம் ஆஸ்துமா ஏற்ப்படலாம்.
13. விசக்கடிகள் மூலமாக ஆஸ்துமா வரலாம்.
மேற்க்குறிப்பிட்ட காரணங்கலில் இருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும்.
14. விலங்குகளின் ரோமத்தை கொண்டு தயாரிக்கப்படும் உடை, விரிப்பான், கம்பளம் மற்றும் கலை பொருட்களை அலர்ஜி உள்ளவர்கள் பயன்படுத்த கூடாது.
15. வீடு, பணியிடம் மற்றும் வாகனங்களில் தூசு சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம். மேலும் தூசி, புழுதி உள்ள இடங்களில் பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும்.
16. பூக்கள் விரிந்து மகரந்தம் காற்றில் கலக்கும் காலை, மாலை நேரங்களில் பூக்கள் இருக்கும் பகுதிக்கு செல்லாமல் இருப்பதும் நல்லது.
17. வாசனை திரவியங்களை பயன்படுத்துவதை தவிர்கவேண்டும்.

18. பால் மற்றும் பால் பொருட்கள், இனிப்பு வகைகள், தயிர், மோர், பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கும் ஜூஸ் மற்றும் உணவு வகைகளை தவிர்க்கவும். கீரைகள் மற்றும் பழங்களை இரவு நேரங்களில் சாப்பிடக் கூடாது.

 

ஆஸ்துமா இயற்கை மருந்துகள்:

1. துளசிச்சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் காலையும், மாலையும் தினமும் சாப்பிடலாம்.
2, வெற்றிலைச்சாறுடன் இஞ்சிச்சாறு, தேன் இவை சமமாக கலந்து தினமும் 2 வேளை சாப்பிட வேண்டும்.
3. நீண்ட நாள் தொடர்ந்த சளி, இருமல், தொண்டைக் கட்டு இருந்தால் ஆடாதொடா இலை பொடியை ஒரு தேக்கரண்டி வெண்ணீரில் கலந்து சாப்பிடலாம் சிறந்த மருந்தாகும்.
4. காலையில் டீ காப்பிக்கு பதிலாக திரிகடுக சூரணம்(சுக்கு,மிளகு,குதிப்பிலி)பயன்படுத்தலாம்.
5. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி, ஆடதொட, இலைகளை கருப்பட்டி(பனை வெல்லம்) சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டினால் ஆஸ்துமாவுக்கான மூலிகை டீ தயார். இதை தினமும் காலையிலும், இரவிலும் சாப்பிடலாம் மூச்சுக் குழலை விரிவடையச் செய்து மூக்கடைப்பை தவிர்க்கவும், சளியை எளிதாக வெளியேற்றவும் இந்த மூலிகை டீ உதவும்.
6. வெள்ளைப் பூண்டை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
7. மிளகுடன் கரிசலாங்கண்ணிச் சாறு, தூதுவளை சாறு, ஆடாதொடைச் சாறு ஆகியவற்றைக் சேர்த்து டீ தயாரித்து காலை, இரவு ஆகிய இரு வேளையும் சாப்பிடுவதற்கு முன்பு  சாப்பிட வேண்டும்.
8. தூதுவளை பொடி கஷாயம் ஆஸ்துமாவிற்கு நல்ல மருந்து.
9. வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா-கரோட்டீன் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது, ஆஸ்துமாவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்
9.மீன் எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நல்ல அளவில் உள்ளதால், அது சுவாசக் கோளாறை குணப்படுத்தி, சரியான செயல்பட வைக்கும்.
10. பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, ஆஸ்துமா நோயாளிகளுக்கும் நல்லது எனவே உணவில் அடிக்கடி பாகற்க்காயை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
11. கொள்ளு ரசம் இருமல் சளி ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும்.
12. தாளிசாதப் பொடி, அதிமதுரம் தொண்டைக்கட்டு வரட்டு இருமலை போக்கும் நல்ல சித்த மருந்துகள்.

   பச்சை சுண்டைக்காய்,வெண்டைக்காய்,கேரட், பீட்ரூட், கருணைக் கிழங்கு, அவரைக்காய்,சுரைக்காய், முருங்கைக்காய், பாகற்காய் வெள்ளைப்பூசணி,காலிபிளவர்,கத்தரிக்காய், முட்டைக்கோஸ்,வாழைக்காய், மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி,கரிசலாங்கண்ணி,முருங்கைக்கீரை,அகத்திக்கீரை.கறிவேப்பிலை, புதினா,மல்லி, பூண்டு, இஞ்சி, உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.


ஆஸ்துமா - ஹோமியோபதி மருந்துகள் :-

ப்பிளாட்டா ஒரிQ:-
1.   ஆஸ்துமாவிற்கு பிளாட்டா ஒரி என்னும் தாய்த்திரவம்(Q) சிறந்த மருந்து உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு நன்கு வேலை செய்யும்.

2. ஹோமியோபதியில் ஆஸ்துமாவிற்கு டிபார்க்குலினம், சாம்புகஸ், ஸ்பான்ஜியா என்ற மூன்று மருந்துகள் முக்கியமாக பயன்படுத்தப் படுகிறது. இதனை சரியான விகிதத்தில் உரிய கால இடைவெளியில் கொடுத்துவந்தால் நிரந்தர குணம்கிடைக்கும்.
  
 அகோனைட்: குளிர்ந்த வரண்ட சூல்நிலையில் வெளியே சென்றால் நோயின் தன்மை அதிகரித்தல். மூக்கில் சூடான நீரொழுலுடன் தும்மல் தோன்றுதல்.மூக்கு சிவந்தும் வீங்கியும் காணப்படும். மூச்சை உள்ளிழுக்கும்போது இருமல் தோன்றும். நேராக உக்காரமுடியாமை.வியர்வை அதிகரித்தல். அதிக தாகம் சாவைப்பற்றிய பயமும் இருக்கும்.

அமோனியம் கார்ப் : இரவில் குளிர் அதிகரித்தல். மூக்கடைப்பு, அதிக தும்மல் மற்றும் மூக்கெரிச்சல், அதிகாலையில் நோயின் தீவிரம் அதிகரித்தல், தொண்டையில் ஏதோ உறுத்தல் அதனால் இருமல் தோன்றுதல்,

அமோனியம் முரியாட்டிகம் : தொண்டையில் எரிச்சல், மூக்கில் நீர் வடித்தல், தொடர்ந்து தும்மல் ஏற்படுத்தும், மூச்சுவிட சிரமம், மாலையிலும் சாப்பிட்ட பின்பும் மல்லாந்து படுக்கும்போதும் இருமல் அதிகரிக்கும், இரவு முழுவதும் இருமல் அதிகரிக்கும், அதிக உடல் உழைப்பினால் வரும் ஆஸ்துமாவிற்கு இது நல்ல மருந்து.

நக்ஸ்வாமிகா : அதிக உணவு, மனக்குழப்பம் கவலை போன்றவற்றால் நோயின் தன்மை அதிகரித்தல், ஜீரணமின்மை, கனவு தொல்லை, தூக்கமின்மை, புரண்டு புரண்டு படுத்தல், புகைபிடித்தல் மது அருந்துதல், அதிக தூசிகளால் ஏற்படும் ஆஸ்துமாவிற்கு சிறந்த மருந்து.

ஹிப்பார் சல்ப் : குளிர்காலத்தில் தோன்றும் ஆஸ்துமா

டல்காமாரா : நெஞ்சில் அதிகமாக சளி படர்ந்திருக்கும்போது பயன்படுத்தும் மருந்து.

காளிகார்ப் : வயதானவர்களுக்கு பயன்படும் மருந்து. முன்புறம் குனிந்தால் நோயின் தீவிரம் குறைந்து காணப்படும். இரத்தசோகை காணப்படும்.




 நோய் அதிகரிக்கும் நேரமும் மருந்தும்


இரவு 11முதல் 2வரை - ஆர்சானிகம் ஆல்பம், சாம்புகஸ்.
இரவு 2முதல் 4வரை - காலி கார்ப்.
காலை 4முதல் 5வரை - நேட் சால்ப்.
பகலில் மட்டும் தோன்றும் ஆஸ்துமா - மெட்டோரினம்.
இரவில் மட்டும் தோன்றும் ஆஸ்துமா - சிபிலினம், டிபார்குலினம்.


காலநிலைக்கு ஏற்ற மருந்துகள் :-

வெப்பமான காலநிலையில் இருந்து குளிரான காலநிலைக்கு மாறும் போத - டல்காமாரா
ஈரமான காலநிலை - நேட்ராம் ச்ல்ப்
வறண்ட காலநிலை - சிபிலினம், சாமோமில்லா.
கோடைகாலம் - ஆர்சானிக் ஆல்பம், ஆர்கண்டம் நைட்ரிகம்.

மற்றும் இபிகா, ஓபியம், கார்போ வெஜ், சில்பியம், செனேகா, காலிபாஸ் முக்கிய மருந்துகளாகும்.


ஆஸ்துமா - அக்குபஞ்சர் புள்ளிகள்:-

DU20, LU6, LU9, REN17, EX17, K3, K7,LI4,GB43, ST40




     மேலே குறிப்பிட்ட புள்ளிகளில் தினமும் காலை அல்லது மாலையில் 20வினாடிகள் மூன்று முதல் ஐந்து முறை விட்டு விட்டு கட்டைவிரல் அல்லது ஆள்காட்டி விரலால் மிதமான அழுத்தம் கொடுக்கவேண்டும்.

ஆஸ்துமா நோயாளிகள் செய்யவேண்டிய ஆசனங்கள்:

பத்மாசனம், புஜங்காசனம், பச்சமோத்தாசனம், ஹலாசனம், விபரீதகரணி, சர்வாங்காசனம், மத்ச்சாயசனம், உட்டியானா, நௌலி, சவாசனம்,நாடிசுத்தி.



1 கருத்து: