16.5.17

இதயம் பாதுகாப்போம்

இதய நோய் ஏற்ப்பட காரணங்களும் தீர்வுகளும்

 

இதய நோய் ஏற்ப்பட காரணங்கள்:-

 

  இதய நோய் ஏற்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. சிலருக்கு பிறவியிலேயே ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக இதய நோய் ஏற்படுகிறது. பலருக்கு அவர்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது. சரியான உணவுப் பழக்கம் இன்மை, உடற்பயிற்சி இன்மை, புகைப்பிடித்தல் மது அருந்துதல், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற காரணங்களாலும் இதய நோய் ஏற்படுகிறது. இரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவதால் அதன் இடைவெளி மிகவும் குறுகலாகிவிடுகிறது. இவ்வாறு படியும் கொழுப்புகள் ‘பிளேக்ஸ்‘ என அழைக்கப்படுகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போதுதான் மாரடைப்பு ஏற்படுகிறது.





இதய நோயின் அறிகுறிகள்:-

 

      வலி இதயத்தில் ஆரம்பித்து தாடை கழுத்து கை கால்கள் என உடல் முழுவதும் பரவும், வியர்வை அதிகரிக்கும், மூச்சுத்திணறல் ஏற்படும்.
அதிகத் தூரம் நடக்கும்போது, மாடிப்படிகளில் ஏறிஇறங்கும் போது, மிகவும் கடுமையான செயலில் ஈடுபடும்போது, கவலை, மன அழுத்தம் அதிக உணர்ச்சி வசப்படும் சமயங்களில் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இதய நோயிக்கு இயற்கை மருந்துகள் :-

1. செம்பருத்தி பூவின் இதழை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும்.
2. வெள்ளை தாமரை இதழ்களை கஷாயம் செய்து சாப்பிடவேண்டும்.
3. கரிசலாங்கண்ணி கீரையை துவரம்பருப்புடன் சமைத்து சாப்பிடலாம்.
4. பூண்டு அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் இது இரத்த குழாய்களில் கொழுப்பு படியாமல் பாதுகாக்கும்.
5. அருகம்புல் சாறு தினமும் 50ml அருந்துவது நல்லது.
6. அன்றாட உணவில் மிளகு, சீரகம், கொத்தமல்லி ஆகிவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
7.சின்ன வெங்காயம், முள்ளங்கி அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
திராட்சை, மாதுளை, பேரிட்சை, கொய்யா சீத்தாப்பழம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
8. உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 

இதய நோயிக்கு அக்குபஞ்சர் புள்ளிகள்:

Li 4, Si3, H3, H7, H9. P1, P6, Lu1





   மேலே குறிப்பிட்ட புள்ளிகளில் தினமும் காலை அல்லது மாலையில் 20வினாடிகள் மூன்று முதல் ஐந்து முறை விட்டு விட்டு கட்டைவிரல் அல்லது ஆள்காட்டி விரலால் மிதமான அழுத்தம் கொடுக்கவேண்டும்.

இருதய நோயிக்கு ஹோமியோபதி மருந்துகள் :-

 அகோனைட் : இதய வலி, படபடப்பு, இதயம் நின்றுவிட்டது போன்ற உணர்வு, முகம் சிவத்தல்.

பெல்லடோனா : கடுமையான இருதய வலி, மூச்சுவிட மிகவும் சிரமம்

ப்ரையோனியா : இதய வலி மூச்சு விடும்போதும் உடலை அசைக்கும் போதும் வலி அதிகரிக்கும்.

டிஜிட்டாலிஸ் : நாடித்துடிப்பு குறைந்தது கானப்படுதல், படபடப்பு, படுத்தால் இதயம் நின்று விடுமோ என்ற பயம், அமைதியின்மை.

காக்டஸ் : இதயத் துடிப்பு வேகமாகவும் ஒழுங்கற்றும் காணப்படும், உடல் வியர்த்து குளிர்ந்து காணப்படும், மார்பு வலி, மூச்சுவிட சிரமம்.

விராட்டம் ஆல் : மார்பில் இருக்கம், மூச்சுவிட சிரமம், அதிக வியர்வை, ஒழுங்கற்ற நாடித்துடிப்பு

கல்கோரியாபாஸ் : உடல் பலகீனம், இரத்த ஓட்டம் சீரின்மை, மூச்சை உள்ளே இழுக்கும்போது வலி அதிகரித்தல்.

நேட்ராம்மூர் : சாப்பிட்ட பிறகும் இரவில் படுத்தபிறகும் ஏற்படும் இதய படபடப்பு.

அதோனிஸ் (மதர் டிஞ்சர்) : இதயத்தை பலப்படுத்தும் ஹோமியோபதி டானிக்.

1 கருத்து:

  1. thank you so much for your selfless services. I sincerely pray for your good health and prosperity to continue this service to all mankind.

    Many people still awaiting for this kind of simple cure.

    பதிலளிநீக்கு