25.7.18

காந்த சிகிச்சை - MAGNETIC THERAPY

மேக்னெட் தெரப்பி

காந்த சிகிச்சையும் அதன் பயன்களும், 


    கிரேக்க நாட்டை சேர்ந்த “மேக்னஸ்" என்ற ஆடு மேய்க்கும் இடையன்; இரும்பினால் முலாம் பூசப்பட்ட குச்சியை வைத்துக்கொண்டு ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான். அப்போது “கிடா என்ற மலையின் பக்கமாக நடந்து வரும்போது: கையில் இருந்த குச்சியானது மிகவும் வேகத்துடன் பாறையை நோக்கி இழுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியே, மேக்னட் (காந்தம்) கண்டுபிடிப்பதற்கு அடிப்படை காரணமானது. “மேக்னஸ்” என்ற மனிதனால் இது ஆராய்ச்சி செய்யப்பட்டதால் " மேக்னட் " என்று அவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டது.
காந்தம்; இரும்பை தன்னுள் இழத்துக்கொள்ளும் என்பதை மட்டுமே அறிந்து வந்த இவ்வுலகம் “மேக்னட்" அவர்களின் ஆராய்ச்சியால், பலவிதமான நோயினை குணப்படுத்த முடியும் என நிறுபனமாகி உள்ளது, காந்தத்தை பொருத்தவரை இரண்டு துருவங்கள் உள்ளன. அவை தென்துருவம் வடதுருவமாகும். இதனை நாம் எப்படி அறிவது என்றால் காந்த துண்டினை ஓர் கயிற்றில் கட்டி விட்டு சுற்றி விடவும். அந்த சுற்று நின்றவுடன் வடக்கு திசையை நோக்கி இருக்கக்கூடிய பகுதி வடதுருவம் என்றும், தெற்கு திசையை நோக்கி இருக்கக்கூடிய பகுதி தென்துருவம் என கண்டறியலாம். வடக்கு நோக்கி உள்ள பகுதியை N.R (NORTH POLE RIGHT SIDE) எனவும் தெற்கு நோக்கி உள்ள பகுதியை S.L (SOUTH POLE LEFT SIDE) எனவும் குறித்துக்கொள்ளவும்; ஏன் என்றால் நாம் சிகிச்சை செய்யும் போது சில பகுதிகளில் வட துருவ காந்தம், தென்துருவ காந்தம் வைத்து சிகிச்சை அளிப்பதற்கு எளிதான முறையாகும்.
காந்த சிகிச்சையை இரண்டு வகையாக பிரிக்கலாம்.


1.ஒரு துருவ சிகிச்சை Unpolar Method
2. இரு துருவ சிகிச்சை.Bipolar Method

ஒரு துருவ காந்த சிகிச்சை:-


   இவை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஒரு குறிப்பிட்ட துருவம் மட்டும் பயன்படுத்தப்படும், வடதுருவம் என்றால் வடதுருவம், தென்துருவம் என்றால் தென்துருவம் நோயாளிகளின் நோய்தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

வடதுருவம் மற்றும் தென்துருவத்தின் பொதுவான குணங்கள்:-


தன்மைகள்
வட துருவம்
தென் துருவம்
1
சக்தி
ஈர்பு சக்தி
விளக்கும் சக்தி
2
மின்னோட்டம்
நேர் முனை
எதிர் முனை
3
சுவை
காரம்
புளிப்பு
4
தன்மை
குளிர்சி
வெப்பம்
5
குணம்
அன்பு
வெருப்பு
6
நிறம்
பச்சை,கருநீலம்,ஆரஞ்சு
சிவப்பு, மஞ்சல்
7
தத்துவம்
சத்துவம்
ரஜோகம்
8
வாயு
பிராணன்
சமானன்
9
அணுக்கூறு
புரோட்டான்
எலக்ட்ரான்
10
பஞ்சபூத சக்தி
நிலம், நீர்
நெருப்பு



பொதுவாக சிகிச்சைக்கு பயன்படும் காந்தங்கள் முன்று வகையாகப் பிரிக்கலாம் அவை;
1. உயர் சக்தி கொண்ட காந்தங்கள்
2. நடுத்தர சக்தி கொண்ட காந்தங்கள்
3. குறைந்த சக்தி கொண்ட காந்ததங்கள்


    உயர் சக்தி கொண்ட காந்தங்கள் 3000 காஸ் சக்தி கொண்டவை. 12வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த படுகிறது. காந்தநீர் தயாரிக்க பயன்படுகிறது.
    நடுத்தர சக்தி கொண்ட காந்தங்கள் 1500 காஸ் சக்தி கொண்டவை.இவை 5 வயதிலிருந்து 12 வயதுடைய சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
    குறைந்த சக்தி கொண்ட காந்தங்கள் 400 காஸ் சக்தி கொண்டவை. இவை கண், காது, மூக்கு, தொடர்பான நோய்கள், தலைவலி போன்ற கழுத்திற்கு மேலே உள்ள உறுப்புகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

 

 

காந்தநீர் தயாரிக்கும் முறை:-


ஒரு துருவ காந்த நீர் :

   இரண்டு லிட்டர் சுத்தமான நீரை காய்ச்சி வடிகட்டி ஆறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
சுத்தமான கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டில்கள் இரண்டை எடுத்துக்கொண்டு ஆறிய நீரை அந்த இரண்டு பாட்டில்களிலும் ஊற்றவும்.
ஒன்றில் வடதுருவ நீர் என்றும்; மற்றொன்றில் தென்துருவ நீர் என்றும் குறித்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு 3000கேஸ் சக்தி கொண்ட இரண்டு காந்தங்களை எடுத்து வடதுருவ காந்தத்தின் மீது வடதுருவ பாட்டிலையும் தென்துருவ காந்தத்தின் மீது தென்துருவ பாட்டிலையும் வைக்கவும்.
இப்படியே சுமார் எட்டு முதல் பனிரெண்டு மணிநேரம் இருக்க வேண்டும்.
இப்போது வடதுருவ, தென்துருவ காந்த நீர் தயார்.
பின்னர் மூன்றாவது பாட்டிலை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு வகை நீரையும் ஒன்றாக கலந்து குலுக்கி வைத்துக் கொள்ளுங்கள் இப்போது இருதுருவ காந்த நீர் தயார்.
பின்னர் இதனை எடுத்து மருந்தாக பயன்படுத்தலாம்.
இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.
வெயில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.













 

 

இருதுருவ காந்த நீர் தயாரிக்கும் மற்றொரு முறை :-


சுத்தமான காய்ச்சி வடிகட்டி ஆறிய நீரை ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் எடுத்துக்கொண்டு அதை 3000 கேஸ் சக்தி கொண்ட காந்தத்தின் தென்துருவத்தின் மீது வைக்கவும். பிறகு பாட்டிலில் மூடிக்கு பதிலாக பாட்டிலின் மேலே மற்றொரு வடதுருவ காந்தத்தை வைக்கவும். மேலே கூறியதுபோல் எட்டு முதல் பன்னிரெண்டு மணிநேரம் வைத்திருந்து பிறகு பயன்படுத்தலாம்.

















 

 

 

காந்த நீரை பயன்படுத்தும் முறை:-


1.காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது மிகவும் நல்லது.
2. காலை, இரவு உணவுக்குப் பின்பு அல்லது முன்பு அரைமணிநேரம் கழித்து அருந்தலாம்.
3. நோயின் தன்மையை பொருத்து குடிக்கும் வேளையை அதிகரித்துக் கொள்ளலாம்.
4. நீரில் கலந்து வாய் கொப்பளித்தல், முகம் கழுவுதல், கண்களைக் கழுவுதல் மற்றும் குளிக்க பயன்படுத்தலாம்.
5. காலையில்வெறும் வயிற்றில் பருகுவதால் மலச்சிக்கல், வாயுத் தொல்லை சிறுநீர் பிரிவதில் பிரச்சினை நீங்கும்.
பெரியவர்கள் 50 மில்லி
சிறியவர்கள் 25 மில்லி
குழந்தைகள் 10 மில்லி பருகலாம்.
காந்தநீர் அருந்தி 1/2 மணிநேரம் கழித்து உணவு உண்ணலாம்.

 

 

இரு துருவ காந்தநீரின் பயன்கள் :-


1. செரிமானம், நரம்பு மண்டலம், சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கிறது.
2. நரம்புத் தளர்ச்சி, இரத்த அழுத்தத்தை சரிசெய்கிறது.
3. ஜீரண மண்டலத்தில் ஏற்படும் அதிகப்படியான அமில, கார, பித்த அளவை குறைக்கிறது.
4. இரத்தக் குழாயில் உள்ள கொழுப்பை கரைக்கவும், கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
5. ஆஸ்துமா, சளி, இருமல், காய்ச்சலை போக்குகிறது.
6. பார்வைத் திறனை அதிகரிக்கிறது.
7. சிறுநீரக கல், பித்தப்பை கல் ஏற்ப்படாமல் பாதுகாக்கிறது.
8. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
9.உடலில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது.
10. மாதவிடாய், வெள்ளைப்படுதல் பிரச்சனைகளை சரிசெய்கிறது.

 

 

வட துருவ நீரின் பயன்கள்:-


1. பாக்டீரியங்கலால் ஏற்படும் நோய்களை தீர்க்கிறது. கிருமி நாசினியாக செயல்படுகிறது.
2. வெட்டுக் காயம், தீ புண்கள், படுக்கை புண்கள் போன்ற எந்தவகை புண்களையும் இந்நீரை கொண்டு கழுவினால் விரைவில் குணமாகும்.
3. புற்றுநோயை நோயை கட்டுப்படுத்துகிறது, மேலும் பரவாமல் தடுக்கிறது.
4. இந்நீரால் கண்களை கழுவி வந்தால் பார்வை தெளிவடையும், கண் நோய்கள் விரைவில் தீரும்.
5. மலேரியா, டைபாய்டு, அம்மை, இன்புளுயன்சா போன்ற தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
6. வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும்.
7. வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம், பயோரியா, ஈறுகளில் இரத்தம் வழிதல், பல் வலி, டான்சில் போன்ற பிரச்சனைகளை நீக்கும்.

 

 

தென் துருவ காந்தநீரின் பயன்கள் :-


1. வலி, வீக்கம், வாயுத் தொந்தரவு, உடல் பலகீனம் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும்.
2. நாடித்துடிப்பை சீராக்கும். கை கால் நடுக்கத்தை போக்கும்.
3. சிறுநீர் சரிவர பிரியாமை, எரிச்சல், விட்டுவிட்டு சிறுநீர் கழிதல் போன்ற பிரச்சனைகளை போக்கும்.
4. உடல் வெப்பநிலையை அதிகரிக்கும்.
5. உணவு செரியாமையை போக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

காந்த எண்ணெய்கள்:-

   இரு துருவ காந்தநீர் தயாரித்தது போலவே காந்தத்தின் இரு துருவங்களுக்கு இடையில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், தலைக்கு தேய்க்கும் எண்ணெய் போன்ற எண்ணெய்களை பத்து முதல் பதினைந்து தினங்கள் வைத்திருந்து பயன்படுத்தினால் அதன் வீரியம் அதிகரிக்கும்.
சோப்பு, சேம்ப்பு, டூத்பேஸ்ட், அழகு சாதன கிரீம் போன்றவற்றையும் வட துருவ காந்தத்தின் மீது வைத்து பயன்படுத்தலாம்.

 

 

 

வட துருவ காந்தத்தினால் தீரும் நோய்கள் :-


1. வீக்கம் கட்டிகளை குணப்படுத்தும்.
2. உடலில் தசைகளை சுருங்கச்செய்யும்.
3. ஞாபகமறதியை போக்குகிறது.
4. உடல் சூட்டை போக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
5. உடலின் கார அமிலத் தன்மையை சமன் செய்கிறது.
6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
7. நுண்கிருமிகளின் வளர்ச்சியை தடுத்து தொற்றுநோய் பரவாமல் பாதுகாக்கிறது.
8. நரம்பு வலி, தூக்கமின்மை, சோர்வு, தலைவலி, மூட்டு வலி, வயிற்றுப்போக்கு பிரச்சனைகளை தீர்க்கிறது.
9. மாதவிடாய், வெள்ளைப்படுதல்.
10. தோல் வியாதிகள், அலர்ஜி.

 

 

தென் துருவ காந்தத்தினால் தீரும் நோய்கள் :-


1. உடலின் வெப்பத்தை அதிகரிக்கும். உடலின் தசைகளை விரிவடையச் செய்யும்.
2. தசைநார்களை வலுவடையச் செய்யும்.
3. இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்.
4. இரத்த த ஓட்டத்தை துரிதப்படுத்தும்.
5. ஆண்மை, பெண்மை சக்தியை அதிகரிக்கும்.
6. கார அமிலத் தன்மையை அதிகரிக்கும்.
7. வைரஸ் பாக்டீரியா கிருமிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதனால் தொற்று நோய்களுக்கு பயன்படுத்த கூடாது.
8. பிராண சக்தியை உடல் முழுவதும் பரவச்செய்கிறது.
9. தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
10. கடினமான தசைகளை மென்மையாக்கும்.

 

ஆதாரசச் சக்கரங்களும் காந்த சிகிச்சையும்


   நமது உடலில் 1. மூலாதாரம் 2. சுவாதிஸ்டானம் 3. மணிப்பூரகம் 4. அனாகதம் 5. விசுக்தி 6. ஆக்ஞை 7. சகஸ்ராரம் என ஏழு ஆதாரசச் சக்கரங்களை மையமாக கொண்டு இயங்குகின்றன. அதன் சமநிலையில் எதாவது குறைபாடு ஏற்ப்பட்டால் உடலில் நோய்கள் உண்டாய்கின்றன.
அதன் குறைபாட்டை சமநிலைப் படுத்த இந்த காந்த சிகிச்சை பயன்படுகிறது.
இந்த ஆதார சக்கரங்கள் அமைந்துள்ள உடலின் முன் பக்கம் வட துருவ காந்தத்தையும். உடலின் பின்புறம் தென் துருவ காந்தத்தையும் ஐந்து நிமிடங்கள் வைத்து சிகிச்சையளிக்க வேண்டும்.
  இவ்வாறு செய்வதால் மனம் ஒருமைப்பாடும், ஆன்மிக சக்தி அதிகரிக்கும், உள்ளத்தில் அன்பு, அமைதி, கருணை பெருகும், நீண்ட ஆயுளையம் ஆரோக்கியத்தையும் தரும்.

 

காந்தங்களை பயன்படுத்தி சில நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் முறை:-


தலைவலிக்கு சிகிச்சை:-

   இதற்கு குறைந்த சக்தி கொண்ட(400 காஸ்) காந்தங்களை நெற்றியின் வலதுபுறமாக வட துருவத்தையும். இடதுபக்கம் தென்துருவத்தையும் வைத்துசிகிச்சை அளிக்க தலைவலி குணமாகும்.

தூக்கமின்மைக்கு:-

   சிலருக்கு இரவு நேரத்தில் வெகுநேரம் தூக்கம் வராமல் கஷ்டப்படுவார்கள். என்ன செய்தாலும் எப்படி செய்தாலும் தூக்கம் வராது. அப்படிப்பட்டவர்கள் தென் துருவ குறைந்த சக்தி கொண்ட காந்தத்தை நெற்றியின் மையத்தில் வைத்து சிகிச்சை செய்தால் தூக்கம் வந்துவிடும்.

தோள்பட்டை வலி:-
  இதற்கு உயர்சக்தி காந்தத்தினை உடலின் பின்பக்க தோள்பட்டையில் வடதுருவ காந்தத்தினை வலது பக்கமும் தென்துருவ காந்த்தினை இடது பக்கமும் வைத்து சிகிச்சை அளிக்க குணமாகும்.


கண்குறைபாடு:-
  இதற்கு குறைந்த சக்தி காந்தத்தினை உபயோக படுத்த வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும் பின்பு இமையின் மேலே வலது பக்கம் வட துருவத்தையும் இடது புறம் தென்துருவத்தையும் வைத்து சிகிச்சை அளித்தால் குணமாகும்.

 

பாதவலிக்கான சிகிச்சை:-
  சிலருக்கு பாதங்களில் வலி ஏற்படுவதுண்டு. அவர்கள் நாற்காலியில் அமர்ந்து இரண்டு கால்களையும் ஒன்றாக வைத்து வடதுருவ சக்தி காந்தத்தினை பாதத்தின் மேல் பகுதியில் வைக்க வேண்டும்;பின்பு தென்துருவ சக்தி காந்தத்தினை கால்களுக்கு கீழே வைத்து 10நிமிடம் வைத்திருந்தால் கால்பாதவலி சிறிதுசிறிதாக குறையும்.


காதுவலி சிகிச்சை முறை:-

  சிலருக்கு காதில் வலி, காது குடைச்சல் ஏற்படுவதுண்டு . அவர்கள் குறைந்த சக்தியுடைய காந்தத்தினை பயன்படுத்த வேண்டும். அதாவது வடதுருவ குறைந்த சக்தியுடைய காந்தத்தினை வலது பக்க காதிலும்; தென்துருவ குறைந்த சக்தியுடைய காந்தத்தினை இடது காதிலும் 10 நிமிடம் வைத்து சிகிச்சை அளித்தால் நிவர்த்தியாகும்.


 

காந்தத்தைக் கொண்டு உடலுக்கு ஏழு வழிகளில் ஆற்றல் மற்றும் சிகிச்சை அளிக்கலாம்:-


முதல் வகை சிகிச்சை :-
கைகள் நெஞ்சு வலி, தலைவலி, வயிற்றுவலி, ஆஸ்துமா, சுவாசப் பிரச்சனை போன்ற இடுப்புக்கு மேலே உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும்
காந்தத்தின் வடதுருவ பகுதியின்மீது வலது உள்ளங்கையும், தென்துருவ பகுதியின்மீது இடது உள்ளங்கையும் வைக்க வேண்டும்.



இரண்டாம் வகை சிகிச்சை :-
சிறுநீரக பிரச்சனை, மலச்சிக்கல், மூலம், மாதவிலக்கு பிரச்சினை போன்ற இடுப்புக்கு கீழ் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும்
காந்தத்தின் வலது உள்ளங்காலை காந்தத்தின் வடதுருவ பகுதியின் மீதும், இடது உள்ளங்காலை காந்தத்தின் தென்துருவ பகுதியின் மீதும் வைக்க வேண்டும்.



மூன்றாம் வகை சிகிச்சை;:-
உடலின் வலதுபக்க வலிகள் மற்றும் உடலின் வலதுபக்கம் ஆற்றல் அளிக்க
காந்தத்தின் வடதுருவத்தின் மீது வலது கையையும், காந்தத்தின் தென்துருவத்தின் மீது வலது காலையும் வைக்க வேண்டும்.



நான்காம் வகை சிச்சை :-
உடலின் இடதுபுற வலிகள் மற்றும் உடலின் இடதுபுறம் ஆற்றல் அளிக்க; காந்தத்தின் வடதுரு பகுதியின் மீது இடது கையையும், காந்தத்தின் தென்துருவ பகுதியின் மீது இடது காலையும் வைக்க வேண்டும்.


 

ஐந்தாம் வகை சிச்சை :-
உடல் வலி, சோர்வு, இரத்த சோகை, நரம்பு வலிகள் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் மற்றும் உடல் முழுவதும் ஆற்றல் அளிக்க
காந்தத்தின் வடதுருவத்தின் மீது வலது கையையும், காந்தத்தின் தென்துருவத்தின் மீது இடது காலையும் வைக்க வேண்டும்.



ஆறாம் வகை சிச்சை:-
இதில் காந்தத்தின் வடதுருவத்தின் மீது இடது கையையும், காந்தத்தின் தென்துருவத்தின் மீது வலது காலையும் வைக்க வேண்டும். இதனால் உடல் முழுவதும் ஆற்றல் பரவும்.



ஏழாம் வகை சிகிச்சை :-

முதல் மற்றும் இரண்டாம் வகை சிகிச்சைகள் இரண்டையும் இணைத்து செய்வதே ஏழாம் வகை சிகிச்சையாகும்.

ஆற்றல்
துருவம்
பகுதி
1
இடுப்புக்கு மேலே உள்ள உறுப்புகளுக்கு ஆற்றல் அளிக்க
வட துருவம்
தென் துருவம்
வலது உள்ளங்கை
இடது உள்ளங்கை
2
இடுப்புக்கு கீழே உள்ள உறுப்புகளுக்கு ஆற்றல் அளிக்க
வட துருவம்
தென் துருவம்
வலது உள்ளங்கால்
இடது உள்ளங்கால்
3
உடலின் வலதுபுற உறுப்புகளுக்கு ஆற்றல் அளிக்க
வட துருவம்
தென் துருவம்
வலது உள்ளங்கை
வலது உள்ளங்கால்

4
உடலின் இடதுபுற உறுப்புகளுக்கு ஆற்றல் அளிக்க
வட துருவம்
தென் துருவம்
இடது உள்ளங்கை
இடது உள்ளங்கால்
5
உடல் முழுவதும் ஆற்றல் அளிக்க
வட துருவம்
தென் துருவம்
வலது உள்ளங்கை
இடது உள்ளங்கால்
6
உடல் முழுவதும் ஆற்றல் அளிக்க
வட துருவம்
தென் துருவம்
இடது உள்ளங்கை
வலது உள்ளங்கால்

7
உடல் முழுவதும் ஆற்றல் அளிக்க
வட துருவம்
தென் துருவம்
வலது உள்ளங்கை, உள்ளங்கால்
இடது உள்ளங்கை, உள்ளங்கால்



 

பயன்படுத்தும் துருவங்கள் :-

  உடலின் வலதுபுறம், இடுப்புக்குக் மேலே, உடலின் முன்புறம் - வடதுருவ காந்தத்தை பயன்படுத்தலாம்.

  உடலின் இடதுபுறம், இடுப்புக்குக் கீழே, உடலின் பின்புறம் - தென்துருவ காந்தத்தை பயன்படுத்தலாம்.

 

 

காந்த சிகிச்சையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் :-


1. சிகிச்சையின் போது உடலின் எந்தப் பாகமும் தரையையோ சுவற்றையோ தொடக்கூடாது. பாய், மர நாற்காலி, மரக் கட்டிலில் அமர்ந்து அல்லது படுத்து சிகிச்சை பெறவேண்டும்.
2. வட துருவ சிகிச்சையின் போது தொற்கு நோக்கியும், தென் துருவ சிகிச்சையின் போது வடக்கு நோக்கியும், இரு துருவ சிகிச்சையின் போது மேற்கு நோக்கியும் அமர வேண்டும்.
3. காலை, மாலை சிகிச்சை செய்ய உகந்த நேரம்.
4. குளிப்பதற்கு ஒரு மணிநேரம் முன்போ அல்லது பின்போ சிகிச்சை செய்ய வேண்டும். குளித்தவுடன் செய்யக்கூடாது.
5. சிகிச்சைக்கு பின்னர் அரைமணி நேரம் கழித்து சூடான பானம், உணவு எடுத்துக் கொள்ளலாம்.
6. பெண்கள் கருவுற்ற நேரத்தில், மாதவிடாய் காலத்தில் சிகிச்சை செய்யக் கூடாது.
7. இரத்தம் உரையும் தன்மையற்ற நபர்கள், அறுவை சிகிச்சையில் உலோக கருவிகள் பொருத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை எடுக்கக் கூடாது.
8. சிகிச்சைக்கு பின் குளிர்ந்த பானங்களை பருகக்கூடாது.
9. 20 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் சிகிச்சையளிக்க கூடாது.
10. நெஞ்சுப் பகுதி, கண், காது, மூக்கு மற்றும் தலையில் உயர் சக்தி காந்தங்களை பயன்படுத்த கூடாது.

 

 

காந்தங்களை பாதுகாக்கும் முறைகள் :-


1. காந்தங்களை கீழே மேலே போடக்கூடாது.
2. நெருப்பிற்கு அருகிலும் வெயிலிலும் வைக்கக்கூடாது.
3. மின்னணு, எலக்ட்ரானிக் சாதனங்கள் அருகில் கொண்டு செல்லக்கூடாது.
4. காந்தங்களை மரப்பெட்டி மரப் பலகையில்தான் வைக்க வேண்டும்.

Ramasamy MD Acu





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக