6.9.16

ஆர்கன் கிளாக் - ORGAN CLOCK

அக்குபஞ்சர் - ஆர்கன் கிளாக்:-

அக்குபஞ்சர் தத்துவத்தின் படி நமது உடலில் ஓடும் உயிர் ஆற்றல் 12 உறுப்புகள் வழியே செயல் படுகின்றன. அந்த உறுப்புகள் ஓவ்வொன்றும் ஆர்கன் கிளாக் விதியின்படி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு உறுப்பு அதிக கூடுதல் சக்தி பெற்று அதன் சக்தி ஓட்டம் பல மடங்கு அதிகரிப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது.


உறுப்புகளும் சக்தி பெறும் நேரமும் :-


சக்தி பெரும் உறுப்பு
நேரம்
நுரையீரல் LU

3am to 5am

பெருங்குடல் LI
5am to 7am

இரைப்பை ST

7am to 9am
மண்ணீரல் SP

9am to 11am
இருதயம் H

11am to 1 pm
சிறுகுடல் SI

1pm to 3pm
சிறுநீரகப்பை UB

3pm to 5pm
சிறுநீரகம் K

5pm to 7pm
இருதய உறை P

7pm to 9pm
மூவெப்பக்குழி TW

9pm to 11pm
பித்தப்பை GB

11pm to 1am
கல்லீரல் LIV

1am to 3am





3am முதல் 5am வரை நுரையீரல் சக்தி பெரும் நேரம் ஆகும். இவ்வேளையில் மூச்சு பயிற்சி, யோகபயிற்சி ,உடற்பயிற்சி, செய்வது உடலில் ஆக்சிஜன் அளவு இருமடங்கு அதிகரித்து உடலுக்கு அதிக நன்மையைத் தரும்.

5amமுதல் 7amவரை பெருங்குடல் சக்தி பெரும் நேரம் இவ்வேளையில் மலஜலம் போன்ற காலைக் கடன்களை முடித்துவிட வேண்டும்.

7am முதல் 9am வரை இரைப்பை நேரம் ஆகும். இவ்வேளையில் காலை உணவை தாமதம் செய்யாமல் உண்டுவிட வேண்டும்.

9am முதல் 11am வரை மண்ணீரல் நேரம் இவ்வேளையில் எந்த உணவுகளையும் உண்ணாமல் இருப்பது நலம்.

11am முதல் 1pm வரை இருதயத்தின் நேரம் ஆகும். இவ்வேளையில் டென்ஷன், கவலை இல்லாமல் எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் மனதை சாந்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

3pm முதல் 5pm வரை சிறுநீர்பை நேரம். இவ்வேளையில் சிறுநீரை அடகிக் வைக்கக் கூடாது. சிறுநீர்பையை காலியாக வைத்திருக்க வேண்டும்.தண்ணீர் குடிப்பது நன்று.

11 pm முதல் 3am வரை பித்தப்பை மற்றும் கல்லீரல் சக்தி அதிகரிக்கும் நேரம். இவ்வேளையில் உறக்கத்தை தவிர்க்கக் கூடாது. இவ்வேளையில் விழித்திருப்பது அஜிரணம், மலச்சிக்கல், கல்லீரல் மற்றும் பித்தப்பை தொடர்பான கோளாறுகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக