ஏட்டுக் குணம்
முன்பொரு காலத்தில் இப்படி ஒரு சிகிச்சை முறை இருந்தது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!குழந்தைகளுக்கு பாலகிரக தோஷம் ஏற்பட்டால், அதற்கு ஏடு எழுதிக் கட்டினால் உடனே குணமாகுமாம்!?!?!? குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், கண் சொருகி விடுதல், உதடு வறண்டு காணப்படுதல், மேற்பார்வை பார்ப்பது, சுணக்கம், சிணுங்கிக் கொண்டே இருத்தல் போன்றவை இதற்கு அறிகுறிகளாகும். இதனால் ஒருசில குழந்தைகள் வாந்தியெடுக்கும். இவை ஏற்பட்டால் பால கிரகத் தோஷம் என அறிந்து ஏடு எழுதிக் கட்ட வேண்டுமாம்! ஏடு எழுதும்போதே குழந்தைக்கு நோய் குணமாவதை உணரலாமாம்!!!
பாலகிரக தோஷத்தினை சில இடங்களில் ஏட்டுக் குணம் என்று சொல்வார்கள். இந்நோய் பதினாறு வயதுவரை ஏற்படும் ஏடு எழுதுவதில் சிறிய ஏடு என்றும், பெரிய ஏடு என்றும் இருவகையுண்டு சிறிய ஏடு எழுதுதலானது, பனை ஓலை ஒன்றில் எழுதிச்சுருட்டிக் கட்டப்படுவதாகும். பெரிய ஏடானது தனித்தனி மடல்களாக பதினாறு மடல்களில் எழுதப்படுவதாகும்.